ஆனலைனில் டெலிவரி செய்யப்பட்ட உணவில் இருந்த பூச்சையைபார்த்து நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக் ஆகி இருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது இவர் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாக இதை ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகிறார்கள். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார்.

நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு நடிகை நிவேதா பெத்துராஜ் ஷாக் ஆகி இருக்கிறார். இதுகுறித்து ஆதாரத்துடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள நிவேதா பெத்துராஜ, ஸ்விக்கி (Swiggy) உணவக செயலி மூலம் பிரபல உணவகம் ஒன்றில் சாப்பாடு ஆர்டர் செய்ததாகவும், அங்கிருந்து டெலிவரி செய்யப்பட்ட உணவில், கரப்பான்பூச்சி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், கரப்பான் பூச்சியுடன் உணவு டெலிவரி செய்யப்படுவது இது முதல்முறையல்ல என்றும் குறிப்பிட்ட உணவகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தி உள்ளார். அதே போல கரப்பான் பூச்சியை சமைக்கும் ஹோட்டல்களில் பெயரையும் குறிப்பிட்டு விடுங்கள் என்றும் கூறியுள்ளார் நிவேதா பெத்துராஜ்.

Advertisement
Advertisement