இப்படிபட்டவரை தான் நான் திருமணம் செய்வேன்- வருங்கால கணவர் குறித்து நிவேதா தாமஸ்.

By Rajkumar · 17/8/2020

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது கதாநாயகிகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும், உலக நாயகன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்ட பட்டது. அதன் பின்னர் ஜெய் நடிப்பில் வெளியான 'நவீன சரஸ்வதி சபதம் ' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் சுமாரான வரவேற்ப்பை பெற்றிருந்தது.

அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.இருப்பினும் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் அனைத்து முன்னணி நாயகிகளுடன் நடித்துவிட்டார். பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்திகள் கூட வெளியாகி இருந்தது.

தற்போது அம்மணிக்கு 24 வயதாகிறது, இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிவேதா தாமஸ், எனக்கு வரப்போகிற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதில் சில எதிர்பார்ப்புகள் வைத்துள்ளேன். அவர் உண்மையாக இருக்க வேண்டும். யாரும் உண்மையாக இருப்பவர்களைத்தான் விரும்புவர். இல்லாதபோது ஒருமாதிரி பேசி விட்டு நேரில் வேறு மாதிரி பேசுபவர்களை பிடிக்காது. கணவராக வருகிறவர் எனது பொறுப்புகளை பகிர்ந்துகொள்பவராகவும், பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full