மன்னிப்பு கேட்டுவிட்டு டீவீட்டை நீக்குவது நல்லது - ரசிகரின் பதிவால் கடுப்பான நிவேதா தாமஸ்.

By Rajkumar · 26/6/2020

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது கதாநாயகிகளாக கலக்கி கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் மைடியர் பூதம். இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இருப்பவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் விஜயின் குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருப்பார்.

https://twitter.com/i_nivethathomas/status/1276457830833254401

ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும், உலக நாயகன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்ட பட்டது. அதன் பின்னர் ஜெய் நடிப்பில் வெளியான 'நவீன சரஸ்வதி சபதம் ' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் கதாநாயகி வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடிக்க அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு இருந்தது. அதன் பின்னர் தெலுங்கில் அனைத்து முன்னணி நாயகிகளுடன் நடித்துவிட்டார்.

பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா நடிக்க உள்ள படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற செய்திகள் கூட வெளியாகி இருந்தது. இறுதியாக தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தனக்கு ஹாய் சொல்லவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று ட்வீட் செய்திருந்தார்.

அதற்கு பதில் அளித்த நிவேதா தாமஸ், இது என்ன வேடிக்கையாக இருக்கிறது ? கண்டிப்பாக கிடையாது நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. இது போன்ற முட்டாள் தனமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன். மேலும், இது போன்ற விஷயங்களை ஊக்குவிற்பவர்கள் மூளையில்லாத முட்டாள் தான். நீங்களே உங்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு உங்களின் ட்வீட்டை நீக்குவது நல்லது.

behindtalkies AMP · Quick view
View full