உடல் எடை கூடி ஆளே மாறிப்போன நிவேதா தாமஸ், வைரலாகும் புகைப்படங்கள் இதோ
நடிகை நிவேதா தாமஸ் உடல் எடை கூடியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது கதாநாயகிகளாக கலக்கிக் கொண்டே வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான சிறுவர்கள் விரும்பிய தொடர் 'மை டியர் பூதம்'. இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன் பின்னர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குறிப்பாக இவர் குழந்தை நட்சத்திரமாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'குருவி' திரைப்படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். பின் சசிகுமாரின் 'போராளி' திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தான் ஜெய் நடிப்பில் வெளியான 'நவீன சரஸ்வதி சபதம்' திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நிவேதா என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு பின்னர் தமிழில் இவருக்கு கதாநாயகியாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
நிவேதா தாமஸ் திரைப்பயணம்:
அதைத் தொடர்ந்து, இவர் உலகநாயகன் நடிப்பில் வெளியான 'பாபநாசம்' படத்தில் கமலின் மகளாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'தர்பார்' படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் தெலுங்கு சினிமாவில் தான் நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார்.
https://www.youtube.com/shorts/z5unpG7Y_Ek
நிவேதா நடிக்கும் படங்கள்:
மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'சாகினி டாகினி' என்ற தெலுங்கு படமும், 'எந்தாடா சஜி' என்ற மலையாள படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர், '35 சின்ன கதகாடு' என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
நிவேதா தாமஸ் உடல் எடை:
இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிவேதா தாமஸ் சமீபத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் உடல் எடை அதிகரித்து, திடீரென அடையாளம் தெரியாத அளவிற்கு தோற்றம் அளித்தது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில்வைரலாகி வருகிறது. நிவேதா தாமஸ் 1995ஆம் ஆண்டு சென்னையில் பிறந்துள்ளார். சென்னையில் பிறந்தாலும் இவளது பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.
நிவேதா தாமஸ் குறித்து:
நிவேதா தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துள்ளார். இவர் மலையாளம், பிரெஞ்ச், ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசக் கூடியவர். என்னதான் குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது நாயகியாக பல படங்கள் நடித்து வந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக திகழ முடியவில்லை. அதற்கு முக்கிய காரணமே இவரது உயரம்தான் என்று சிலர் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் இவர் இப்படி உடல் எடை கூடி இருப்பதால், தற்போது இவரின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.