கார் ஒட்டியபடி நிவேதா தாமஸ் செய்த செயல்.! குவியும் பாராட்டும், விமர்சனமும்.!

By Rajkumar · 1/4/2019

குழந்தை நட்சத்திரமாக இருந்த பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர்களாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் நிவேதா தாமஸும் ஒருவர். சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.

https://www.instagram.com/tv/BvtEjQRAlVQ/?utm_source=ig_share_sheet&igshid=pssggcmj5hqo

தொடர்ந்து சீரியல் நடித்து வந்த இவர், விஜய் நடித்த குருவி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அதன் பின்னர் சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி படத்தில் அல்லரி நரேஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர் நவீன சரஸ்வதி சபதம் தெர நவீன சரஸ்வதி சபதம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகராக விளங்கி வருகிறார். மிகவும் இளம் நடிகை என்பதால் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியான நடிகையாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் கார் ஓட்டியபடி படிகொண்டே வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதனை கண்ட பலர் இவரது பாடும் திறமையை பாராட்டினாலும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டும் போது இப்படி அஜாக்கிரதையாக பாடிக்கொண்டு செல்வது தவறு என்று பலர் கமன்ட் அடித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=QwSrVc0V3aA

Tamil Behind Talkies AMP · Quick view
View full