காட்டுத்தீயாய் பரவும் ஏஐ போட்டோ - கோபத்தில் நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு
சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் உடைய பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக நடிகைகள் உடைய புகைப்படங்களை மாஃபிங் செய்து ஆபாசமாக வெளியிட்டு வருகிறார்கள். இது மிகப்பெரிய அளவில் பிரச்சினையாகவே மாறிக்கொண்டு வருகிறது. ராஷ்மிகா மந்தனா,
பிரியங்கா மோகன் உட்பட பல பிரபலங்கள் இந்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கூட பிரபல நடிகை ஸ்ரீ லீலா புகைப்படத்தை ஆபாசமாக சோசியல் மீடியாவில் ஏஐ மூலம் உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள் என்று கண்டித்து ரசிகர்களுக்கு
வேண்டுகோள் வைத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் தற்போது நடிகை நிவேதா தாமஸ் உடைய
புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நிவேதா தாமஸ் புகைப்படம்:
அதாவது, நிவேதா தாமஸ் புடவையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறார்கள். ஆனால், இது முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. இதற்கு
கண்டித்து நிவேதா தாமஸ் இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்தவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்.
நிவேதா தாமஸ் பதிவு:
இது தனிப்பட்ட தனி உரிமை மீதான தாக்குதல். தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். தற்போது நிவேதா தாமசின் இந்த பதிவுக்கு பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
நிவேதா தாமஸ் குறித்த தகவல்:
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நிவேதா தாமஸ். இவர் ‘நவீன சரஸ்வதி சபதம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். பின்னர் இவர் பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் நடித்தார். பின் தமிழில் இவருக்கு கதாநாயகியாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து இவர் தெலுங்கு மொழியில் தான் நடித்து வருகிறார்.