'சீரியஸ் காட்சியில் சிரித்தேனா' கேலிக்கு உள்ளான தனது நடிப்பு குறித்து நிவிஷா விளக்கம்

By subhashini · 8/6/2024

தன்னை பற்றிய விமர்சனத்திற்கு சீரியல் நடிகை நிவிஷா கொடுத்து இருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தவகையில் இல்லத்தரசிகளின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக இருந்த தெய்வமகள் தொடர் 2013 ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ் குமரன் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்தத் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மீண்டும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் நடித்த சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகை நிவிஷா. இவருடைய சொந்த இடத்தை அறந்தாங்கி. இவருடைய அப்பா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.

நிவிஷா மீடியா பயணம்:

இவர்களுடைய குடும்பத்திற்கு மீடியா, சினிமா என்று எந்த தொடர்பும் கிடையாது. இருந்தாலும், இவருக்கு சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கு பின் கல்லூரி படிக்கும்போதே இவர் நிறைய ஷார்ட் பிலிம் எல்லாம் நடித்திருந்தார். அப்படித்தான் இவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது. ஆனால், இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. அதற்குப் பிறகுதான் இவர் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். இவர் முதன் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த தெய்வமகள் சீரியலில் நடித்திருந்தார்.

நிவிஷா நடித்த சீரியல்கள்:

அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த ஈரமான ரோஜாவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் ஓவியா, சிவகாமி, முள்ளும் மலரும் போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார். இவர் பெரும்பாலும் வில்லி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். அதன் பின் பெரிதாக இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இவர் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாம் பதிவிட்டு வருகிறார்.

நெட்டிசன்கள் கிண்டல்:

அதோடு இவர் படங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தெய்வமகள் சீரியலில் ஒரு சீரியஸான காட்சியின் போது நிவிஷா அழுவதற்கு பதில் சிரித்த மாதிரியே நடித்து இருப்பார். அது பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது. தற்போது அந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து கிண்டல் கேலி செய்து வருகிறார்கள். அதோடு நடிகை நிவிஷாவையும் கிண்டலடித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நிவிஷா பதிவில், இது நல்ல எடிட்டிங். உண்மையில் அப்போது எனக்கு பல் வலி. ட்ரீட்மென்ட் எடுத்து கொண்டு இருந்தேன்.

நிவிஷா பதிவு:

அதனால் தான் என்னுடைய முகம் அப்படி மாறி இருந்தது. நான் அழுதுமே பார்க்க சிரிப்பது போல் இருந்தது. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணி நடிக்க முடியவில்லை. அதை பத்தி என்னுடைய டீம் அப்போது சொல்லி இருந்தார்கள். அந்த சமயத்திலேயே நான் நிறைய இன்டர்வியூ கொடுத்திருந்தேன். அது பார்ப்பதற்கு நல்ல காமெடியாகவும் இருந்தது. அந்த வீடியோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. ஆனால், தேவையில்லாமல் ஒருத்தருடைய பர்சனல் பத்தி நெகட்டிவ் விட்டியா போடாதீங்க. பல் வலியால் தான் என்னால் அப்போது ஒழுங்காக நடிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full