சினிமா முன்பு இருந்தது போல் இப்போ இல்லை - நிழற்குடை படவிழாவில் நடிகை தேவையானி பகிர்ந்த தகவல்

By subhashini · 10/5/2025

தமிழ் சினிமா உலகில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தேவயானி. 1993 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது வரை சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் உள்ள விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் தேவயானி நடித்திருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகை தேவயானி அவர்கள் சினிமா உலகில் இந்த அளவிற்கு பிரபலமாக இருக்க காரணம் இயக்குனர் ராஜகுமாரன் தான்.

தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரனும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போது தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் இவர் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த ‘கோலங்கள்’ சீரியல் 6 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இதை அடுத்து இவர் சீரியல், படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

தேவயானி குறித்த தகவல்:

அந்த வகையில் தற்போது தேவயானி அவர்கள் நிழற்குடை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை தர்ஷன் ஃபிலிம் சார்பில் ஜோதி ஜீவா என்பவர் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை சிவா ஆறுமுகம் என்பவர் எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜித், கண்மணி, இளவரசு, ராஜ் கபூர், வடிவுக்கரசி, நீலிமா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் இன்று திரையரங்களில் வெளியாகி இருக்கிறது. அதோடு 2018க்கு பிறகு தேவையானி நடிப்பில் வந்திருக்கும் படம் இது தான்.

தேவையானி பேட்டி:

இந்த படத்தில் தேவயானி ஈழத் தமிழராக நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்த பேட்டியில் தேவையானி, ரொம்ப வருடம் கழித்து ஒரு படம் பண்ணியிருக்கிறேன். சரியான கதாபாத்திரங்கள் கிடைக்காததால் தான் என்னால் நடிக்க முடியவில்லை. சரியான படம் வரவேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அப்படியான ஒரு படம் தான் நிழற்குடை. இந்த காலகட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் இப்போது அதிகமாக ஃபோன், லேப்டாப், வீடியோ கேமில் அடிமையாகி இருக்கிறார்கள். இந்த நிலைமை மாறனும். நம்ம குழந்தைகளுக்கு உறவுகள் பற்றி அதிகமாக சொல்லிக் கொடுக்கணும்.

குடும்பம் பற்றி சொன்னது:

எங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கு உதவி இருந்தது. இருந்தாலும் நானும் ராஜகுமாரன் சார் தான் இப்போது வரைக்கும் குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய நேரத்தை 100% எங்களோட குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். வேலை செய்யும் ஆட்களை நாங்கள் நம்பி இருந்தது கிடையாது. டிரைவராக இருந்தாலும் நான் டிரைவ் பண்ணி தான் என்னுடைய குழந்தைகளை பள்ளியில் விடுவேன். இப்போ எங்க வீட்டில் டிரைவரும் கிடையாது, சமையலுக்கு ஆட்களும் கிடையாது. சமையலுக்கு ஆட்கள் இருந்த சமயத்திலும் நான் சமைப்பேன். இப்போது முழு நேரமாக சமைத்துக் கொண்டிருக்கிறேன்.

https://www.youtube.com/watch?v=FwKRSl6YL14

சினிமா பற்றி சொன்னது:

கொரோனாவிற்கு பிறகு நிலைமை மாறிவிட்டது. குழந்தைகளுக்கு அது ரொம்ப பிடித்திருக்கிறது. நாங்கள் தானே குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தோம். அவர்களை நாங்கள் தான் பார்த்துக் கொள்ளணும். அவர்கள் தான் எங்களுடைய பெரிய சொத்து. இனிமேல் அதிகமாக படங்கள் நடிக்கிறேன். இந்த வருடத்தில் அடுத்தடுத்து படங்கள் வரும். சின்ன பட்ஜெட் படங்களும் இங்கு அதிகமாக ஓடணும். முன்பெல்லாம் படங்கள் 100, 200 நாட்கள் ஓடி இருக்கு. ஆனால், இப்போ நிலைமை அப்படி இல்லை. வன்முறை அதிகமாக இருக்கிற படங்கள்தான் வருகிறது. அதற்கு மத்தியில் நல்ல மெசேஜ் சொல்ற படங்களும் வரணும். நான் மற்ற மொழி படங்கள் நடித்து கொடுத்திருந்தாலும் தமிழ் படங்களுக்கு முதலில் தேதி இருக்கா என்று தான் கவனிப்பேன். தமிழ் படங்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full