சுருண்டு விழுந்த சீமான், அலறி அடித்து தூக்கி சென்ற தொண்டர்கள் - வைரலாகும் வீடியோ (அவரின் தற்போதைய நிலை)

By Rajkumar · 2/4/2022

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பரீட்சயமானவர். சீமான் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சீமான் அவர்கள் அமைதி படை படத்தில் தான் முதலில் நடித்து உள்ளார். பின் இவர் பிரபல இயக்குனரான பாரதி ராஜாவின் உதவி இயக்குனராக இருந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் சீமான் இயக்குனரானார்.

அதன் பின்னர் இவர் இனியவளே, வீரநடை போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். இறுதியாக இவர் வாழ்த்துக்கள் என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் வேறு எந்த படத்தை சீமான் இயக்கவில்லை. பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சீமான் அரசியலில் குதித்து விட்டார். தற்போது சீமான் அவர்கள் முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்தி வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் சோசியல் மீடியாவின் சர்ச்சை நாயகனாக வலம் வருகிறார்.

சீமான் பற்றிய தகவல்:

இவர் போடும் கூட்டங்களில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு எதாவது ஒரு விஷயத்தை பேசி விட்டு சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளம்புவார். இந்நிலையில் திருவெற்றியூரில் போராட்டம் நடத்தச் சென்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்த வீடியோ சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திருவெற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகளை இடிக்க அரசாங்கம் உத்தரவிட்டது. இதனால் அண்ணாமலை நகர் பகுதி மக்களை சந்திப்பதற்காக சீமான் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களை ஒன்று சேர்த்து போராட்டம் பண்ணுவதற்கு ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அண்ணாமலை பகுதியில் சீமான் போராட காரணம்:

அதன்படி சீமான் அவர்கள் அண்ணாமலை நகர் பகுதி மக்களை சந்திப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களோடு சென்றிருந்தார். மேலும், அங்கு கடுமையான வெயில் அடித்த நிலையில் வீடுகள் இடிக்கப்படுவது எதிராக நாம் தமிழர் கட்சியினர் முழக்கமிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் சீமான் பேசிக்கொண்டிருந்தார். அதில் அவர், நம்பிக்கையோடு இருங்கள், வீடுகளை இடித்து விடுவார்கள் என்று பயப்படவேண்டாம். கவலைப்படாமல் நம்பிக்கையோடு இருங்கள். எந்த கட்டிடம் இடித்தாலும் நாம் வந்து போராடுவோம்.

செய்தியாளர்களிடம் சீமான் கூறியது:

ஓட்டுரிமை, குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் தரவேண்டும். நாட்டில் இந்த மாதிரியான கொடுமைகள் நடக்க கூடாது என்று தான் போராடுகிறோம். இனி ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுடைய ஆட்டம் ஆட தான் செய்வார்கள். இந்த ஆட்சியில் இப்படித் தான் நடக்கும். இன்னும் நான்கு ஆண்டுகள் நீங்கள் சகித்துக் கொண்டு தான் இருந்தாக வேண்டும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு சீமான் பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்தார்.

https://www.youtube.com/watch?v=C0RiAbFy2MQ

சீமான் மயங்கி விழ காரணம்:

உடனே அங்கிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களும், செய்தியாளர்களும் பதற்றமடைந்து சீமானை தூக்கிக்கொண்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கடுமையான வெயில் அடித்த காரணத்தினால் தான் சீமான் மயங்கி விழுந்தார் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த இடம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின் சீமானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு சீமான் நலமுடன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படி சீமான் போராட்டம் நடத்திய இடத்தில் மயங்கி விழுந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full