வித்தியாசமான பாணியில் வெளிவந்த 'ஓ பட்டர்ஃப்ளை' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஓ பட்டர்பிளை. இந்த படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், லட்சுமி பிரியா சந்திர மௌலி, கீதா கைலாசம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் பாணியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் கதாநாயகி நிவேதிதா சதீஷ் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே கணவரை இழந்து தவித்து இருக்கிறார். மனதளவில் நிவேதிதா பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதோடு அவரை சுற்றி இருப்பவர்கள் ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் இவர் மரணம் தான் இதற்கு சரியான முடிவு என்று தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போது அவருக்கு ஆலோசனை கொடுத்து உண்மையை புரிய வைக்கிறார் அவருடைய சகோதரி லட்சுமி பிரியா.
இவர் துறவறம் சென்றிருந்தார். பின் தன்னுடைய சகோதரிக்காகவே மீண்டும் திரும்பி வந்தார். அதற்குப் பின் தன்னுடைய திருமண வாழ்க்கை முதல், காதல் பற்றி எல்லா விஷயத்தையும் நிவேதிதா சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் தன் கணவரை தான் கொலை செய்ததாகவும் சொல்லி அதிர்ச்சி அளித்து இருக்கிறார். அதன் பிறகு என்ன ஆனது? அவர் அப்படி சொல்ல காரணம் என்ன? அவர் கணவரின் இறப்பிற்கு பின் இருக்கும் மர்மம் என்ன? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.
படத்தின் நாயகி நிவேதிதா சதீஷ் ஒரு முக்கியமான ரோலில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய நடிப்பின் மூலம் படம் முழுவதையும் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். ஒரு பக்கம் முன்னாள் காதலன், இன்னொரு பக்கம் கணவர் என்று இரண்டு பக்கமும் தவிக்கும் சூழலிலும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். அதிலும் நிவேதிதா பற்றி முன்னாள் காதலனுக்கும் கணவருக்கும் உண்மை அறிந்துமே எந்த ஒரு பதட்டமும் பயமும் இல்லாமல் நடித்திருக்கும் காட்சிகள் எல்லாம் அருமையாக இருக்கிறது.
நிவேதிதாவின் முன்னாள் காதலராக சிபி நடித்திருக்கிறார், கணவராக அதுல் நடித்திருக்கிறார். இருவருமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடைய வேலையை சிறப்பாக செய்து முடித்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம். கதாபாத்திரங்களின் தேர்வு இயக்குனர் அருமையாக செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் படத்தொகுப்பு எடிட்டிங் எல்லாமே அருமையாக இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்தில் கதை பொறுமையாக இருந்தாலும் இறுதியில் இயக்குனர் கொடுத்திருக்கும் டிவிஸ்ட் அட்டகாசமாக இருக்கிறது. படத்தின் ஆரம்ப முதல் இறுதி வரை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார். எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக கதையை நகர்த்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம்.
பின்னணி இசை படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் ஒரு சிறப்பான படமாக ஓ பட்டர்பிளை இருக்கிறது.
நிறை :
நடிகர்கள் நடிப்பு
கதைக்களம் அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு பக்கபலம்
கதையை இயக்குனர் நேர்த்தியாக கொண்டு சென்று இருக்கிறார்.
கிளைமாக்ஸ் சூப்பர்
குறை:
சில லாஜிக் குறைபாடுகள்
சில இடங்களில் தொய்வு
மொத்தத்தில் ஓ பட்டர்பிளை - உயரத்தில் பறக்கிறது