ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பயணிகள் பயணித்த இரண்டு ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக்கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 250 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.அதோடு 650 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். விபத்து நடந்த இடத்திற்கு விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும், இந்த கோர விபத்தில் ஹவுரா – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா சூப்பர் பாஸ்ட் அதுமட்டுமில்லாமல் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்குவதாக ரயில்வே அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர், மு க ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இந்த கோர சம்பவத்திற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் இது ஒரு துக்க நாள் நாளாக அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருக்கிறது. சற்று முன் வெளிவந்த தகவல்படி, 261 பேர் உயிரிழந்தனர். 650 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

இந்த நிலையில் இந்த கோர விபத்தை பார்க்கும் போது கமல் எடுத்த அன்பே சிவம் படம் தான் நினைவிற்கு வருகிறது என்று ரசிகர்கள் பலர் அன்பே சிவம் படத்தின் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு காட்சியில் ஒரிசாவில் இருந்து மாதவன் மற்றும் கமல் இருவரும் கோராமண்டலா எக்ஸ்பிரஸ் ரயலில் பயணிப்பார்கள். அதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் பாபட்லா ஸ்டேஷன் முன்பு கோரா விபத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகி இருப்பது போல காண்பித்து இருப்பார்கள்.

தற்போது இந்த படத்தில் இடம்பெற்றது போல தற்போது ஒரிசாவில் ஏற்பட்டுள்ள இந்த கோர விபத்தை ஒப்பிட்டு ரசிகர்கள் பலர் கண் கலங்கி வருகின்றனர். அதே போல இந்த படத்தில் ரயில் விபத்தில் சிக்கியவரகர்களுக்கு ரத்தம் தேவை என்று மருத்துவர் ஒருவர் போராடி கொண்டு இருப்பார். இதனை தொடர்ந்து கமல் ஏற்கனவே தன்னுடைய ரத்தத்தை கொடுத்துவிட்டு விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனை காப்பற்ற அறுவகை ரத்தம் தேவை என்று மாதவனிடம் சொல்வார்.

Advertisement

ஆரம்பத்தில் அதனை ஏற்க மறுக்கும் மாதவன் பின்னர் அந்த சிறுவனை சந்தித்த பின் தன்னுடைய ரத்தத்தை தானமாக கொடுப்பார். படத்தின் இந்த காட்சியை போலவே நிஜத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அந்த ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் நேற்று இரவு அவர்களுக்கு ரத்ததானம் கொடுத்து உதவ முன்வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 3,000 யூனிட் ரத்தம் தானமாக கிடைத்துள்ளது. 

Advertisement

இந்த படத்தில் கமல் மாதவனிடம் கதை சொல்லும் போது தன்னுடைய தந்தை கடல் அலையின் முன்பு புகைப்படம் எடுக்க சொன்னார். அப்போது அந்த கடல் அலை கொன்று விட்டது என்றும் சுனாமி குறித்தும் பல விஷயங்களை கூறியிருப்பார். அதன் அப்போது சுனாமி என்றால் என்னவென்று தமிழ் நாட்டில் இருந்த பலருக்கு தெரியாது. ஆனால். இந்த படம் வெளியான 2 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் சுனாமி தாக்கி பல லட்ச மக்களின் உயிரை பலி வாங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement