சிவகார்த்திகேயனை கௌரவித்த இராணுவ பயிற்சி மையம், எதற்கு தெரியுமா? குவியும் பாராட்டுக்கள்
அமரன் படத்தினால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கும் கௌரவம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.
அமரன் படம்:
பிரபலங்கள் பாராட்டு:
இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உட்பட பல பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் அமரன் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கும் கௌரவ பட்டம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Honouring Brilliance!
— Raaj Kamal Films International (@RKFI) November 28, 2024
The Officers Training Academy proudly felicitates @Siva_Kartikeyan for his phenomenal performance in #Amaran, portraying #MajorMukundVaradarajan a distinguished alumnus of the OTA. #Amaran5thweek #AmaranMajorSuccess#KamalHaasan #Sivakarthikeyan… pic.twitter.com/WssThuahvT
சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த கௌரவம்:
அதாவது, அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் அவருடைய நடிப்பை பாராட்டி ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் பாராட்டி கௌரவித்து இருக்கிறது. இந்த பயிற்சி மையத்தில் தான் முகுந்த் வரதராஜன் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் முகந்த் வரதராஜன் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற காட்சிகள் எல்லாம் படத்தில் இடம்பெற்று இருந்தது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:
தற்போது இது தொடர்பாக ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சிவகார்த்திகேயனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து பதிவு போட்டு இருக்கிறார்கள். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து இவர் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது தவிர இன்னும் சில இயக்குனர்களின் படத்தில் சிவா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.