ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது.! நேரில் சென்று வாழ்த்தியது யாருனு பாருங்க.!

By Rajkumar · 15/2/2019

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகியாக அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்திருந்தனர் மதுமிதா. இந்த படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். 

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மதுமிதா.

மதுமிதா, அவருடைய தாய்மாமா மகனும் உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயலை திருமணம் செய்துகொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார். இதனிடையே, இவர்களுடைய திருமணம் இன்று ([பிப்ரவரி 15) பெரியோர்கள் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையைச் சேர்ந்த செலிபிரிட்டிகள் பலர் இவர்களுடைய திருமணத்தில் கலந்துகொண்டனர். மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன், அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர். இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full