நான் தான்பா ரஜினிகாந்த் - உதயநிதி போட்ட ட்வீட்டால் வைரலாகும் ரஜினியின் பழைய வீடியோ.

By Rajkumar · 19/7/2022

தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டு இருக்கும் சம்பவம் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தான். கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். ஜூலை 13ம் தேதி அதிகாலை விடுதியில் இரண்டாவது மாடியில் இருந்து ஸ்ரீமதி மாணவி கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறப்படுகிறது.

ஆனால், மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதாக பெற்றோர்கள், உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர்கள், உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகமே கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது.

மாணவியின் மரணத்தில் மர்மம்:

மாணவியின் மரணம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைதான் நிலையில் தற்போது வேதியல் ஆசிரியர், கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும், மாணவியின் மரணம் தொடர்பாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

https://twitter.com/Itsme0911/status/1548986265248288768

உதயநிதி ஸ்டாலின் பதிவு:

இதனையடுத்து தமிழகத்தில் நடந்த கலவரத்திற்கு காரணம் சமூக விரோதிகளின் ஊடுருவல் என்று பலரும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், 'நான் தான் டா ரஜினிகாந்த்' என்று ஹாஸ்டேக் போட்டிருக்கிறார். அதாவது, சில வருடங்களுக்கு முன் ஸ்டெர்லைட் பிரச்சனை நடந்து கொண்டிருந்தது. அப்போது பேட்டியில் சமூக விரோதிகளின் ஊடுருவல் என்று ரஜினிகாந்த் கூறி இருந்தார்.

https://twitter.com/Newly_hunk/status/1549248984824238080

ஸ்டெர்லைட் பிரச்சனை :

அதுமட்டுமில்லாமல் ஸ்டெர்லைட் பிரச்சனை போது அடிபட்ட நபர்களை ரஜினிகாந்த் மருத்துவமனையில் சென்று சந்தித்த போது அதில் ஒருவர் நீங்கள் யார் என்று கேட்டதற்கு நான் தான் ரஜினிகாந்த் என்று சொன்னார். அப்போது அது சோசியல் மீடியாவில் பயங்கரமாக கிண்டல் கேலி உள்ளானது. தற்போது அதை உதயநிதி ஸ்டாலின் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக கூறி இருக்கிறார்.

https://twitter.com/devashak/status/1548948532022747136

உதயநிதியை கிண்டல் செய்த ரசிகர்கள்:

இதை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் 'அன்றே கணித்த தலைவர்' என்று கூறி ரஜினி பேட்டி அளித்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்கள். அதோடு நான்தாண்டா உதயநிதி ஸ்டாலின் என்று ஹாஸ்டேக் போட்டு உதயநிதியை கிண்டல் செய்து வருகிறார்கள். தற்போது உதயநிதியை கிண்டல் செய்யும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full