யாராவது கேப்டன் யார் என்று கேட்டால் இந்த வீடியோவை காட்டுங்க - Goosebump வீடியோ

By Rajkumar · 5/12/2023

கடந்த சில ஆண்டுகளாக இவர் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு இவர் அடிக்கடி தொடர் சிகிச்சைக்கு சென்று வருகிறார். இப்படி இருக்கும் கடந்த மாதம் விஜயகாந்த் அவர்கள் இருமல், சளி அதிகமாக உள்ளதால் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது.இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். பின் விஜயகாந்தின் நுரையீரலில் பிரச்சனை இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களாகவே விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் தகவல் வந்திருக்கிறது. இதனை அடுத்து பிரபலங்கள் பலருமே விஜயகாந்தை நேரில் பார்க்க சென்றிருக்கிறார்கள். அந்த வகையில் ஆர்.கே செல்வமணி, நாசர், திரை பிரபலங்கள் பலருமே விஜயகாந்த் சந்திக்க மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். பின் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்துஇருந்தார்கள்.

அதில் நாசர், கேப்டன் நன்றாக இருக்கிறார். நார்மலாக தான் இருக்கிறார். அவருடைய அனைத்து புலன்களுமே நன்றாக வேலை செய்கிறது. கொஞ்ச நாட்களாக வரும் செய்திகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. இதெல்லாம் வதந்திகள் தான். நாங்கள் மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவரை சந்தித்து பேசினோம். கேப்டன் திரும்பவும் வருவார், உங்களை எல்லாம் பார்ப்பார் என்று தெளிவாக சொன்னார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை, வதந்திகளை நம்பாதீர்கள். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னால் அவர் எப்படி இருந்தாரோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறார் என்றும் கூறி இருந்தார்.

https://twitter.com/isanthakumar/status/1730043996205117677?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1730043996205117677%7Ctwgr%5E3e93c2437ab16c9c231b31fff4455a42e2b8aa20%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Fvijayakanth-at-nadigar-thilagam-sivaji-ganesan-funeral-153824

இப்படி ஒரு நிலையில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்துடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் கேப்டனின் பழைய புகைபடங்கள் மற்றும் வீடியோக்களை எல்லாம் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் டிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் கேப்டன் விஜயகாந்த் கலந்து கொண்டு அவர் ஆற்றிய தொண்டின் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

behindtalkies AMP · Quick view
View full