பழைய விக்ரம் படத்தின் அனுபவங்களை ஒளிப்பதிவாளர் ரங்கா பகிர்ந்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் விக்ரம். இந்த படத்தில் கமலஹாசன், சத்யராஜ், அம்பிகா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தின் தொடர்ச்சியாக தான் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.

Advertisement

விக்ரம் திரைப்படம்:

மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இந்த நிலையில் பழைய விக்ரம் படத்தின் அனுபவம் குறித்து ஒளிப்பதிவாளர் ரங்கா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, விக்ரம் படம் பற்றிய நினைவுகள் நிறைய இருக்கு. கமல் இப்ப வெளியான விக்ரம் படத்தோட ஷோவுக்கு என்னை கூப்பிட்டு இருந்தார். படம் பார்த்தேன். ஆனால், அந்த படம் வேறு. இந்த படம் வேறு. 1986 இல் உள்ள என்னோட விக்ரம் ஞாபகத்துக்கு வந்தது.

ஒளிப்பதிவாளர் ரங்கா அளித்த பேட்டி:

அந்த படம் எனக்கு கிடைக்க காரணம் என்னுடைய இயக்குனர் ராஜசேகர் சார், கமல் சாரும் தான். அந்த காலகட்டத்தில் ராக்கெட் சேட்டிலைட் பின்னணியோடு ஒரு கதை பண்ணுவது பிரம்மிப்பாக இருந்தது. அப்பவே பெரிய பட்ஜெட் ஆனது. அந்த ராக்கெட்டை திருவான்மியூரில் ஒரு என்ஜினியர் தான் ரெடி பண்ணி லாரியில் பொருத்தி கொடுத்தார். இப்ப இருக்கிற மாதிரி மானிட்டர் வசதி எல்லாம் அப்போது கிடையாது. அதனால் நடிகர்கள், இயக்குனர்கள் எல்லோரும் கேமராமேன் சொல்வதை தான் கேட்பார்கள்.

Advertisement

சிவாஜி துப்பாக்கியை பயன்படுத்திய காட்சி:

அதில் வனிதாமணி என்ற பாடல் கமலுக்கும், அம்பிகாவுக்கு டூயட். சத்யராஜ் உடைய ஆட்கள் அவர்களை துப்பாக்கியில் சூட் பண்ணி விடுவார்கள். அந்த பாடல் சீனுக்காக சிவாஜி சார் கிட்ட அவரோட ரைப்பிளில் உள்ள லென்ஸைக் கேட்டு வாங்கி எடுத்திருந்தோம். (இதே போல தான் விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜுக்கு துப்பாக்கியை வரவழைத்து உதவினார் கமல்) அதுமட்டுமில்லாமல் அந்த காலத்தில் ரஜினி, கமல், சிரஞ்சீவி என யார் படமாக இருந்தாலும் 35 நாட்களுக்குள் படப்பிடிப்பை முடித்து விடுவோம். அதுக்கு மேல ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு போக வேண்டி இருக்காது.

Advertisement

ஒளிப்பதிவாளர் ரங்கா:

ஒரு படத்தை முழுசாக முடித்த பிறகு அடுத்த படத்துக்கு போவோம் என்று தன்னுடைய திரைத்துறை பயண அனுபவங்களை ஒளிப்பதிவாளர் ரங்கா பகிர்ந்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 70, 80 காலகட்டத்தில் பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் ரங்கா. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக வெளியாகி 36 வருடங்கள் ஆன விக்ரம் படத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement