இந்த சீன உங்க குழந்தைக்கு எப்படி சொல்லி கொடுத்தீங்க - ரித்துவின் இந்த வீடியோவால் எழுந்த சர்ச்சை.
தற்போது இருக்கும் காலகட்டத்தில் சமூக வலைதளத்தின் மூலம் பல்வேரு நபர்கள் ஒரே நைட்டில் பிரபலமடைநது விடுகின்றனர். அதிலும் குழந்தைகள் வீடியோ என்றால் அதற்கு ரீச் மிக விரைவில் கிடைத்துவிடும். அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாகி கொண்டுவருகிறது rithu rocks என்ற யூடுயூப் சேனல். 7 வயது குட்டிக் குழந்தை ரித்துவின் சமீபத்திய வீடியோ, தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருக்கிறது. இந்த `ரித்து ராக்ஸ்' (rithu rocks) யூடுயூப் பக்கம் ஆரம்பித்து சில மாதங்கள் ஆகிவிட்டது.
https://twitter.com/Russetlane/status/1416012672550719494
இதில் இதுவரை பல்வேரு வீடியோகளை பதிவிட்டாலும் சமீபத்தில் அந்த சிறுவர், செய்தி வாசிப்பாளராக கலக்கிய வேல்ராஜ் வீடியோ மூலம் தான் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங் குழந்தையாக மாற காரணமாக இருந்தது. அந்த வீடியோவிற்கு பின்னர் இந்த சேனலுக்கு ஏகப்பட்ட பாலோவர்கள் கூடிக்கொண்டே வருகிறது. தற்போது இந்த சேனலை கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
இதுவரை வெளியான 7 வீடியோக்களில் ஒன்றுகூட 50,000 பார்வையாளர்களைத் தாண்டாத நிலையில், சமீபத்தில் வெளியாகி வைரலான `செய்தி வாசிப்பாளர்' வீடியோ லட்சத்துக்கும் மேற்பட்ட வியூஸைக் குவித்திருக்கிறது. ராசிபுரம் அருகில் உள்ள வையப்பமலையை சேர்ந்த ஜோதி ராஜ் என்பவரின் மகன் தான் இந்த 7 வயது சிறுவன் ரித்து என்னும் ரித்விக்
https://twitter.com/wildboaroffl/status/1416083320253816834
கடந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் மற்றவர்களை போல நிதி நெருக்கடிக்கு ஆளான ஜோதி ராஜ் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த போது தான் இந்த யூடுயூப் யோசனை வந்துள்ளது. 2017-லேயே ரித்து பாடுன வீடியோ ஒன்றை யூடியூப்ல சேனல் ஆரம்பிச்சி ஒரு வீடியோ பதிவிட்டு இருக்கின்றனர். ஆனால், அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், இப்போது ரித்துவின் வீடியோ வைரல்.
தற்போது இந்த சிறுவனுக்கு பலர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது வீடியோ ஒன்று கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் இந்த யூடுயூப் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவில் டைலர் வேடத்தில் இருக்கும் ரித்து, பெண்ணாக இருக்கும் ரித்துவிடம் பேசிய அந்த வசனம் தான் தற்போது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
https://twitter.com/appleuh_/status/1416013538598916098
சமீபத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து ஒருவர், இந்த சீனை உங்களது குழந்தைக்கு எப்படி விளக்கினார்கள் எப்படி இந்த காட்சியில் நடிக்க வேண்டும் எப்படி ரியாக்ஷன் கொடுக்கவேண்டும் என்பதை எப்படி கற்றுக் கொடுத்தீர்கள் இது மிகவும் தவறான ஒரு விஷயம் இது தவறான வளர்ப்பு என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு மற்றொரு ட்விட்டர் வாசி, நேத்து நைட்டு 2.21L ல இருந்த சப்ஸ்கரைபர் இப்போ 3.43 ல் நிக்குது... எல்லாம் வெறி ப்ரோ.. காசுக்காக பையனுக்கு என்ன போதிக்கிறோம்னு மறந்து போய் பண்ணிட்டு இருக்குதுங்கநேத்து நைட்டு 2.21L ல இருந்த சப்ஸ்கரைபர் இப்போ 3.43 ல் நிக்குது... எல்லாம் வெறி ப்ரோ.. காசுக்காக பையனுக்கு என்ன போதிக்கிறோம்னு மறந்து போய் பண்ணிட்டு இருக்குதுங்க