கீர்த்தி சுரேஷ் அம்மா உடன் காதல்? பல வருடங்களுக்கு பின் உண்மையை சொன்ன 'ஒரு தலை ராகம்' நடிகர் சங்கர்
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் டி.ராஜேந்தர். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் டி ராஜேந்திரன் கதை, வசனம் எழுதி இயக்கி வெளியாகி இருந்த படம் ஒருதலை ராகம். இந்த படத்தை இ.எம் இப்ராஹிம் தயாரித்திருந்தார். அதோடு அப்போதெல்லாம் இளையராஜாவின் இசையில்லாமல் எந்த படங்களுமே வெளிவராது. ஆனால், இந்த ஒரு தலை ராகம் படத்தில் இளையராஜாவின் இசை இல்லாமல் வேறு ஒருவரை வைத்து டி ராஜேந்தர் இயக்கி இருந்தார். இருந்தும் அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.
அந்த படத்தில் சங்கர், ரூபா, உஷா ராஜேந்தர், தியாகு, சந்திரசேகர், ரவீந்தர் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருந்தார். இந்த படம் 365 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனையும் படைத்தது. மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனவர் தான் சங்கர். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பும் கிடைத்தது. இவர் சின்ன வயதிலேயே சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டதால் பள்ளிப்படிப்பு எல்லாமே சென்னையில் தான் முடித்தார்.
ஒருதலை ராகம் படம்:
இவர் ஒருதலை ராகம் படத்திற்கு பிறகு அதிகம் மலையாள மொழி படத்தில் தான் நடித்தார். இவர் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பின் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மணல் நகரம்’ என்ற படத்தின் மூலம் இவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அந்த படத்தில் பிரஜின், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி, வருணா ஷெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இயக்குனர் சங்கரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அதற்குப் பின் இவர் தமிழில் நடிக்கவில்லை.
சங்கர் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் சங்கர், டி ராஜேந்திரன் இயக்கிய ஒரு தலை ராகம் படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமே அதிர்ஷ்டம்தான். காரணம், அந்த படத்தில் நடிப்பதற்காக மூன்று பேரை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். கடைசியில் டி.ராஜேந்திரன் அவர்கள் என்னை தான் தேர்வு செய்தார். காரணம், என்னுடைய நடை தான். நான் நடந்து வந்தது ராஜா போல இருந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பேன் என்று தான் அவர் தேர்வு செய்தார். அதோடு அந்த படத்தில் என்னுடைய பெயர் ராஜா.
https://www.youtube.com/watch?v=AYeAoP_1VYc
படம் பற்றி சொன்னது:
முதல் படமே எனக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. அந்த படத்திற்காக நான் முதலில் வாங்கிய சம்பளம் 2500 ரூபாய். அந்த படத்திற்கு பிறகு நான் பல படங்களில் நடித்தேன். அந்த படங்களுமே எனக்கு நல்ல பெயரை தான் வாங்கி கொடுத்திருக்கிறது. அந்த காலத்திலேயே ஒரு தலை ராகம் படம் 2 கோடி வசூல் செய்தது. இந்த காலத்தில் அந்த படம் வெளிவந்திருந்தால் 500 கோடி வசூல் இந்திருக்கும். மேலும், நான் பல நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறேன். ஆனால், அனைவரிடமும் ரெண்டு மூணு படத்தில்தான் நடித்தேன். நடிகை கீர்த்தி சுரேஷ் உடைய அம்மா மேனகாவுடன் மட்டும் தான் 30 படத்திற்கு மேல் நடித்திருக்கிறேன். இதனால் எனக்கும் அவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும், திருமணம் செய்ய போவதாகவும் எல்லாம் கூறியிருந்தார்கள். ஆனால், மேனகா எனக்கு நல்ல தோழி.
காதல் கதை பற்றி சொன்னது:
என்னுடைய நெருங்கிய நண்பர் சுரேஷ் தான் அவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் எனக்கு எந்த வருத்தமுமே கிடையாது. அதேபோல் ஒருதலை ராகம் படத்தில் என் உடன் நடித்த ரூபாவை காதலிக்கிறேன் என்றெல்லாம் கூறினார்கள். அதைப்பற்றி எல்லாம் நான் கவலைப்படவும் இல்லை. என்னுடைய திருமணமும் காதல் திருமணம் தான். பெற்றோர்களுடைய சம்மதத்துடன் தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய மனைவி லண்டனில் டான்ஸ் ஸ்கூல் வைத்திருக்கிறார். சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து பிரேக் எடுத்து நான் லண்டன் சென்று விட்டேன். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறேன். நான் இப்போது நெகட்டிவ் அல்லது வில்லன் கதாபாத்திரம் கிடைத்தால் கண்டிப்பாக உடனே ஓகே சொல்லி விடுவேன் என்று கூறியிருக்கிறார்.