தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி எம் ஜி ஆர் மற்றும் கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது. இருவரும் அரசியலில் எதிரி கட்சியினராக இருந்தாலும் அரசியலை தவிர்ந்தது பொது வழக்கை எனும் போது இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக இருந்திருக்கின்றனர். தமிழ் நாட்டில் தொடக்க காலத்தில் மேடை நாடகங்கள் சினிமாவாக தயாரிக்கப்பட்டன. எம் ஜி ஆர் முதலில் நடித்த படம் சதிலீலாவது அதற்கு பிறகு சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்தார்.

அதன் பின்னர் எம் ஜி ஆரும் கருணாநிதியும் ராஜகுமாரி படத்தின் மூலம் தான் அறிமுகமாகி கொண்டனர். அதற்கு பிறகு இவர்களின் நட்பு மென்மேலும் வளர்தது. குறிப்பாக நாடகங்கள் அந்த காலத்தில் கொண்டாடப்பட்ட காரணத்தினால் பல மேடை நாடகங்களில் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர். இவர்கள் நாடகங்களை அரங்கேற்றும் காலங்களில் கே. பி சுந்தராம்பாள். தியாகராஜ பாகவதர், எம் ஆர் ராதா போன்ற பழம்பெரும் கலைஞர்கள் நாடகத்துறையில் சிறந்து விளங்கினார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Advertisement

அந்த வகையில் சென்னை சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் ஒத்தவாட தெருவில் உள்ள நாடக கொட்டாய் நூற்றாண்டு பழமையானது. இந்த பாரம்பரிய நாடக கொட்டாயில் தியாகராஜ பாகவதர், கருணாநிதி, எம் ஜி ஆர் போன்றவர்கள் பலர் தொடக்க காலத்தில் தங்களுடைய நாடகங்களை அரங்கேற்று உள்ளனர். இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எம் ஜி ஆர் தன்னுடைய தாயார் சத்யபாமாவுடன் இந்த கொட்டாயிற்க்கு அருகே உள்ள வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.

அப்படி பட்ட காலத்தில் கருணாநிதி எழுதிய பல நாடகங்களில் எம் ஜி ஆர் நடித்திருக்கிறார். எனவே அப்போது முதலே இருவருக்கும் நட்பு இருந்திருக்கின்றது. இப்படி சிறப்பு மிக்க நாடக கொட்டாய் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இல்லாத காரணத்தினால் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த சிறப்பு மிக்க நடக்க கொட்டாயை சென்னை மாநகராட்சி மீட்டெடுத்திருக்கிறது.

Advertisement

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இல்லாத வாறு நாடகத்துறையில் இருந்து வந்து நாடாண்டவர்களின் வரலாற்றோடு ஒன்றிய இந்த நாடக கொட்டையில் பல்வேறு கலைஞர்கள் பல நாடகங்கள், ஒப்பனைகள், ஒத்திகைகள் நடத்தி வந்திருந்தாலும் கால ஓட்டத்தினால் பொலிவிழந்து தற்போது அந்த கலைஞர்களில் நினைவாக நின்று கொண்டிருக்கிறது.

Advertisement
Advertisement