ஆரவ்வின் ராஜபீமா படத்தில் இணைந்த இரண்டு பேவரைட் பிக் பாஸ் நடிகைகள்..!

By Rajkumar · 13/12/2018

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான அரவ் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

https://www.instagram.com/p/BrUEFcsAqC7/

மேலும், “மீண்டும் வா அருகில் வா” என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது புது முக இயக்குனர் சந்தோஷ் நரேஷ் இயக்கி வரும் “ராஜபீமா” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் நடிகர் ஆரவ்.

இந்த படத்தின் போஸ்ட்டரை பார்தததும் இது யானை மற்றும் பாகனுக்கு இடையேயான மற்றும் ஒரு கதை என்று நினைத்திருப்பீர்கள். அது உண்மை தான்.ஆனால், இந்த படத்தில் வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்லும் கொடுமை குறித்து கூறியுள்ளோம்,அதை யானைக்கு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பந்ததத்தை கொண்ட ஒரு கதையையாக கமெர்ஷியல் பணியில் உருவாக்கயுள்ளோம் என்று ஆரவ் தெரிவித்துள்ளார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை ஓவியா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று ஆரவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர்  ஒன்றை வெளியிட்டுள்ளார்.அது போக இந்த படத்தில் யாஷிகா ஆனந்தும் ஒரு சிறு கதாபாத்திரத்தில்  நடித்துள்ளாராம்.  

Tamil Behind Talkies AMP · Quick view
View full