பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. சமீபத்தில் இவர் நடித்த 90 ml திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவரை அரசியலுக்கு அளித்துள்ளனர் பிரபல கட்சியினர்.

இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி விவகாரங்கள் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொருபக்கம் தங்கள் கட்சியின் பிரசாரத்திற்கு பயன்படுத்த பிரபல நடிகர், நடிகைகளை இழுக்கும் முயற்சியும் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisement

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியா ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற மைய கருவை வைத்து இப்படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பெண் இயக்குனர் அனிதா என்னிடம் இக்கதையை சொன்னபோது உடனே ஏற்றுக்கொண்டேன்.

இந்த படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு என்மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதைபற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. அரசியலில் சேர்வீர்களா என்கிறார்கள். என்னை பிரபல கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் நேரில் சந்தித்து தங்கள் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார்கள். மறுத்துவிட்டேன். என்னை கட்சியில் சேர அழைத்தது யார் என்பதை சொல்லவிரும்பவில்லை. கோடி ரூபாய் கொடுத்தால் பிரசாரத்துக்கு செல்வீர்களா என்று கேட்டால் நிச்சயம் மாட்டேன். 

Advertisement
Advertisement