சந்தோஷமாக வீடு திரும்பி விட்டேன், நீங்க எல்லாரும் இனி ஹாயாக இருக்கலாம்- வீடு திரும்பியதும் பாடகி சுசீலா வெளியிட்ட வீடியோ

By Rajkumar · 20/8/2024

சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவுடன் பாடகி சுசீலா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான பின்னணி பாடகியாக இருந்தவர் பி. சுசீலா. இவர் தென்னிந்தியாவின் இசைக்குயில் என்றும் மெல்லிசை அரசி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ன பழமொழிகளில் பாடிய அசித்திருக்கிறார்.

மேலும் , இவர் இதுவரை 25 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரை பலரும் இசை அரசி, கான கோகிலா, கான சரஸ்வதி என்றெல்லாம் அழைக்கிறார்கள். இவர் 1950 முதல் 1990 வரை காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற பின்னணி பாடகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் பாடியிருக்கிறார்.

பி. சுசீலா திரைப்பயணம்:

அதோடு இவர் உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற 'பால் போலவே' என்ற பாடலுக்கு முதன்முறையாக தேசிய விருதை பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமையைக் கொண்டவர் சுசீலா. இவர் தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Indiaglitz Tamil (@indiaglitz_tamil)

சுசீலா குறித்த தகவல்:

இவரின் இசைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், அந்தக் காலத்தில் இருந்த முன்னணி நடிகைகள் சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி ஆகியோர் பி.சுசீலா குரல் தான் தங்களுக்கு வேண்டுமென்று ஆசைப்படுவார்களாம். அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்தவர் சுசீலா. தற்போது இவர் வயது மூப்பின் காரணமாக பாடுவதை நிறுத்திவிட்டார். தற்போது இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி:

தற்போது, சென்னையில் ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் பி. சுசீலா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சமீபத்தில் வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக பாடகி பி. சுசீலா பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ள பி.சுசீலா நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=L6ZlT4e2p8c

பி. சுசீலா வீடியோ:

அதில், மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொண்ட செவிலியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் காட்டிய பாசத்திற்கும் அக்கறைக்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. மேலும், நான் நலம் பெற பிரார்த்தனை செய்த கோடான கோடி அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full