தினேஷ்-கலையரசன் கூட்டணி , 'தண்டகாரண்யம்' படத்தின் அப்டேட் சொன்ன பா.ரஞ்சித் - என்ன தெரியுமா?

By subhashini · 25/8/2025

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் தண்டகாரண்யம் படத்தின் டீசர் வெளியீட்டு தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார்.

இதனால் இவர் படங்கள் குறித்தும், இவர் மீதும் விமர்சனங்கள் இருக்கிறது. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியிருந்தார். பின் இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

பா.ரஞ்சித் திரைப்பயணம்:

இதை அடுத்து இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கடைசியாக இவர் விக்ரம் நடித்த தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் முதன்முதலாக 2018 ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் என்ற படத்தை தான் தயாரித்திருந்தார்.

ரஞ்சித் தயாரித்த படங்கள்:

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி கொண்டு என்ற படத்தை தயாரித்திருந்தார். இந்த படமுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர் ரைட்டர், சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, குதிரைவால், பொம்மை நாயகி, ப்ளூ ஸ்டார், ஜே பேபி, கடைசியாக 2025 ஆம் ஆண்டு வெளிவந்த தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த பாட்டில் ராதா போன்ற படங்களை எல்லாம் தயாரித்து இருக்கிறார்.

தண்டகாரண்யம்:

தற்போது இவருடைய நீலம் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்டகாரண்யம்.
இந்த படத்தை இரண்டாம் உலகப்போரின் கடைசி கொண்டு படத்தை இயக்கிய இயக்குனர் அதியன் ஆதிரை தான் இயக்கியிருக்கிறார். இது இவரின் இரண்டாம் படம். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள் தாஸ், யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் டீசர்:

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு பணிகள் எல்லாம் முடிவடைந்தது. இந்த படம் செப்டம்பர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய டீசர் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகயிருக்கிறது. இதை படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் சோசியல் மீடியாவில் அறிவித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பா.ரஞ்சித்- தினேஷ்- கலையரசன் கூட்டணியில் இந்த படம் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full