ஏன் கர்ணன் புடிக்கல, திருப்பி அடிச்சா உனக்கு புடிக்காதா - பா. ரஞ்சித் ஆவேச பேச்சு
'வாழை' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆவேசமாக நடிகர் ரஞ்சித் பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் வெளியான 'பரியேறும் பெருமாள்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’, 'மாமன்னன்' போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
வாழை படம்:
மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதில் வாழை படக்குழுவினருடன் பா. ரஞ்சித், வெற்றிமாறன், ராம் உட்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் பா.ரஞ்சித், வீட்டில் நடக்கும் சின்ன சின்ன எமோஷனலான விஷயத்தை கூட நான் படத்தில் காட்சியாக கொண்டுவர நினைப்பேன். ஆனால், அதை என்னால் எடுக்க முடியாமல் போகும்போது எமோஷனல் ஆகி அழுது விடுவேன்.
விழாவில் பா.ரஞ்சித்:
அதை மாரி செல்வராஜ், அவரோட முதல் படத்திலேயே ரொம்ப வலியான ஒரு விஷயத்தை படமாக்கியிருந்தார். இவ்வளவு வலியுள்ள ஒரு படத்தை எடுக்கிற, உன்னை சுத்தி இருப்பவர்கள் என்னடா சொல்ல போறாங்க? அப்படின்னு நான் அவரிடம் கேட்டேன். ஒரு கதையை சரியாக எடுத்துக்காட்டி, பார்ப்பதிலும், மக்களுக்கு கொண்டுபோய் சேர்ப்பதும் மிகப்பெரிய விஷயம் இருக்கு. அதன் தொடர்ச்சியாக தான் அவருடைய படங்களை பார்க்கிறேன்.
Pa Ranjith 😐
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 20, 2024
Karnan Yaarukuya Pidikathu… Maamannan Sec Hlf thaan Kavvidichu. Ithuku oru reason solrare Manushan😟
PP Super thaan, aana thr r haters for tat film as well.
pic.twitter.com/mnDM6IWvHY
மாரி செல்வராஜ் குறித்து சொன்னது:
மாரி செல்வராஜ் உடைய பலமே கதை சொல்லல் தான். ரொம்ப எளிமையாக கதையை சொல்லக் கூடியவர். இதனால் மக்கள் மத்தியில் அது பேசும் பொருளாக மாறி ஆகிறது. அதை நான் ரொம்ப பிரம்மிப்பாக பார்க்கிறேன். இந்த படங்கள் எல்லாம் எடுக்க பல வாய்ப்புகள் இருந்தாலும் இந்த மொழியில் இப்படி தான் சொல்ல வேண்டும் என்று தேர்ந்தெடுத்து அதை மக்களுக்கு கொண்டு செல்கிறார். சில சமயங்களில் கொடுமையாக அவர் காட்டும் சில விஷயங்கள் ரொம்ப பயமாகவும் இருக்கு.
கர்ணன் - மாமன்னன் குறித்து சொன்னது:
அவருடைய படங்களில் வலியை காட்டும் போது கைதட்டி கொண்டாடுகிற கூட்டம், அதே கர்ணனாக நின்று சண்டை போடும் போது வன்முறையாக அதை மிகை படுத்தினார்கள். அதை விமர்சனம் செய்தார்கள். பரியேறும் பெருமாள் நல்ல படம்ன்னா, கர்ணன், மாமன்னன் என மொக்கை படமா? திருப்பி அடிச்சா அது நல்ல படம் இல்லையா? மொத்தத்தில் அவருடைய வாழ்க்கையை பற்றி ரொம்ப வெளிப்படையாக வாழை படம் மூலம் சொல்லி இருக்கிறார் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.