வானம் கலைத் திருவிழா 2025: சிறைக்கு செல்லத் தயாராக இருக்கிறோம் - ஆவேசத்தில் பா.ரஞ்சித் சொன்ன விஷயம்
வானம் கலைத் திருவிழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான வானம் கலைத் திருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தகம் அரங்கில் தொடங்கி இருந்தது. இந்த கலைத் திருவிழா ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் ஆறாம் தேதி வரை நடைபெற்றது.
இந்த விழாவில் உலக அளவில் விருதுகள் வாங்கிய திரைப்படங்கள், தடை செய்யப்பட்ட உலக திரைப்படங்கள் உட்பட பல முக்கியமான படைப்புகள் திரையிடப்பட்டது. அந்த வகையில் 'சந்தோஷ்' என்ற படம் திரையிடப்பட இருந்தது. ஆனால், அந்த படத்தை திரையிட அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய இயக்குனர் பா ரஞ்சித், இந்த படத்தை திரையிடக்கூடாது என்று போலீஸ் தரப்பில் இருந்து நோட்டீஸ் ஒட்டி சென்றிருந்தார்கள்.
வானம் கலை திருவிழா:
அதோடு படம் திரையிடக்கூடாது என்று பிரச்சனை செய்திருந்தார்கள். பிரசாத் லேபின் உரிமையை நீக்கி விடுவோம் என்றெல்லாம் மிரட்டி இருந்தார்கள். சந்தோஷ் படத்தை திரையிட முடியவில்லை என்றால் என்ன? நாங்கள் வெளியிட்டு வெளியில் திரையிடுவோம். அவர்கள் பிரச்சனை செய்தாலுமே அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு சக்தி நம்மிடம் இருக்கிறது. கைது செய்தாலும் பரவாயில்லை, கொஞ்ச நாள் சிறையில் இருப்போம்.
பா.ரஞ்சித் குறித்த தகவல்:
பத்து நாட்கள் சிறையில் இருந்தாலுமே புத்தகம் படிக்கலாம். அதுவும் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும். கைதாகுவதற்கு தயாராக இருக்கிறோம். என்றெல்லாம் கூறியிருந்தார். பிரிட்டிஷ்- இந்திய திரைப்பட இயக்குனர் சந்தியா சூரி இயக்கத்தில் உருவாகியிருந்த படம்தான் சந்தோஷ். இந்த படம் ஆஸ்கர் உட்பட உலகின் பல்வேறு விருது விழாவிற்கு சென்று கவனம் ஈர்த்து இருந்தது. இந்தியாவில் ஜாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை உட்பட பல பிரச்சினைகள் இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறது.
ரஞ்சித் திரைப்பயணம்:
இந்த படத்தை இந்தியாவில் திரையிட தணிக்கை வாரியம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
ரஞ்சித் படங்கள்:
அதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியிருந்தார். பின் இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கடைசியாக இவர் இயக்கியிருந்த தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.