தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக பா ரஞ்சித் திகழ்ந்து வருகிறார்..இவர் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மெட்ராஸ் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து கபாலி எனும் பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கி உலக அளவில் பிரபலமானார். பின் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ரைட்டர் பிரஸ் மீட் :

இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ‘டான்சிங் ரோஸ்’ ஷபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் காதல் கதையில் உருவாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பா ரஞ்சித் அவர்கள் இயக்குனர் பிரஸ்மீட் ஒன்றில் கலந்து இருந்தார்.

Advertisement

ஹரிக்கு ஏன் வாய்ப்பு வரவில்லை :

அதில் தன்னுடைய படத்தில் வேலை பார்த்த நடிகர்களின் நிலை குறித்து ஓபனாக பேசி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, ஹரி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மிகத் திறமையான நடிகர். அவரை யாரும் சரியாக புரிந்து கொள்ளவில்லை. மெட்ராஸ் படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

என் படத்தில் நடிப்பவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது :

மேலும், என் படத்தில் வேலை செய்தவர்களுக்கு எல்லாம் இது தான் பெரிய பிரச்சினை. ரஞ்சித் படத்தில் நடித்தால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூறி அவர்களுடைய வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. அதேபோல் என்னுடன் உதவி இயக்குனராக இருந்தவர்கள் கதை சொல்ல செல்லும்போது உங்களுடைய இயக்குனர் இப்படித்தான் பேசுவாரா? அவர் கதை இப்படி தான் சொல்வாரா? நீங்களும் இப்படித்தான் இருப்பீர்களா என்று அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

Advertisement

நான் கடுமையாக உழைப்பேன் :

அதே மாதிரி என்னுடைய படத்தில் வேலை செய்தவர்கள், நடித்தவர்கள் என எல்லோருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுவது அப்பட்டமான உண்மை. இது யாரிடம் வேண்டுமானாலும் தனியாக கேட்டுக்கொள்ளுங்கள். அதுமட்டும் இல்லாமல் அவர்களை நடத்துகிற விதம் ரொம்ப மோசமாக இருக்கிறது. இதை பற்றி என்னிடம் வந்து நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு நான் இதையெல்லாம் விடுங்க நாம் தொடர்ந்து வேலை செய்வோம். அதற்கான வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். யாராலும் மறுக்கமுடியாத வாய்ப்பு கிடைக்கிற வரைக்கும் நாம் கடினமாக உழைப்போம் என்று சொல்வேன்.

Advertisement

அதேபோல் நான் ஒரு கதை எழுதும் போது அவர்களை போடவில்லை என்றும் வெளியேவும் வாய்ப்பு கிடைக்கவில்லை, உள்ளேயும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கவலைப்பட்டு இருக்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை, என் கதைக்கு அந்த கதாபாத்திரத்திற்கு யார் தேவையோ அவர்களை வைத்து தான் எடுக்க முடியும். பல நடிகருக்கான சரியான வாய்ப்புகள் உருவாகவில்லை. நாம் சரியான வேலை செய்து கொண்டேசெல்வோம். நமக்கான அங்கீகாரம் வாய்ப்பு உருவாகும் என்று நம்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement