என்ஜாய் எஞ்சாமியால ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பதிலடி தான் இந்த ஆல்பம் - ரஞ்சித் ஓப்பன் பேச்சு

By subhashini · 18/7/2024

'என்ஜாயி என்சாமி' சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா ரஞ்சித் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணணின் மகளும் பிரபல பாடகியுமான தீ பாடிய பாடல்களில் ஒன்று என்ஜாய் எஞ்சாமி. இவருடன் இந்த பாடலை ராப் பாடகர் அறிவு என்பவரும் இணைந்து பாடி இருந்தார். இந்த பாடல் 2021 ஆம் ஆண்டு யூடியூபில் வெளியாகி இருந்தது.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். அதிலும் குழந்தைகளை இந்த பாடல் மிகவும் கவர்ந்தது . நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. பின் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விழாவில் எஞ்சாயி எஞ்சாமி பாடலை பாடகி தீ பாடி இருந்தார். ஆனால் , இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்த அறிவு இந்த விழாவில் வரவில்லை.

அறிவு பதிவு:

இந்த விவகாரம் குறித்து பாடகர் அறிவு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘ என்ஜாயி என்சாமி பாடலை நான் இசையமைத்தேன், எழுதினேன் ,பாடினேன் ,ஆடினேன். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை. இப்போது இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல.

சந்தோஷ் நாராயணன் – அறிவு சர்ச்சை:

என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கிறது. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம். முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்” என பதிவிட்டு இருந்தார். இந்த விவாகரத்திற்கு பின்னர் சந்தோஷ் நாராயணன் – அறிவு கூட்டணி பிரிந்துவிட்டது.

அறிவு ஆல்பம் பாடல்:

அதற்குப் பின் இவர்கள் இருவருமே சேர்ந்து எந்த ஒரு பாடலையும் இயற்றவில்லை. அதுமட்டுமில்லாமல் அறிவுக்கு ஆதரவாக பா ரஞ்சித் இருந்ததால் சந்தோஷ் நாராயணன்- ரஞ்சித் உடைய கூட்டணியும் பிரிந்தது. இந்த நிலையில் தற்போது அறிவு அவர்கள் 'வள்ளியம்மாள் பேராண்டி' என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி இருக்கிறார். இது மட்டும் இல்லாமல் இவர் இன்னும் சில ஆல்பம் பாடல்களையும் உருவாக்கி இருக்கிறார். தற்போது இந்த ஆல்பம் பாடலின் உடைய வெளியீட்டு விழாதான் நடைபெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட பா ரஞ்சித், என்ஜாய் எஞ்சாமி பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

ரஞ்சித் கொடுத்த பதிலடி:

அந்த பாடலுக்காக சந்தோஷ் நாராயணன்-தீ இருவருமே சிறப்பாக பணியாற்றி இருந்தார்கள். அதே போல் அறிவின் எழுத்து ஆக்கப்பூர்வமாக இருந்தது. நம்முடைய தலைமுறைகளின் அரசியலை அழகாக சொல்லி இருந்தார். ஆனால், அந்தப் பாடலால் அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்து இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்தார். அவர் மனதை தேற்றுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டார். அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் தான் இந்த வள்ளியம்மாள் பேராண்டி பாடல் இருக்கிறது. கண்டிப்பாக இந்த பாடல் அந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full