கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் இயக்குனர் பா.இரஞ்சித் - யார் தெரியுமா?
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் பயோபிக் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா.ரஞ்சித். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. இவர் ஜாதிகளை மையமாக வைத்து தான் படங்களை கொடுத்து வருகிறார். இதனால் இவர் படங்கள் குறித்தும், இவர் மீதும் விமர்சனங்கள் இருக்கிறது.
இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அட்டக்கத்தி’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு ‘மெட்ராஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியிருந்தார். பின் இவர் இயக்கிய சார்பட்டா பரம்பரை படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.
பா.ரஞ்சித் திரைப்பயணம்:
இதை அடுத்து இவர் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கடைசியாக இவர் இயக்கியிருந்த தங்கலான் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. நடிகர் விக்ரம் நடித்திருந்த படம் தான் ‘தங்கலான்’ . கேஜிஎஃப் இல் இருந்த பூர்வ குடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருந்தது.
பா.ரஞ்சித் படங்கள்:
இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து இருந்தார்கள். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரித்தும் வருகிறார்.
பா.ரஞ்சித் தயாரிப்பு:
அந்த வகையில் பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகி இருந்த ப்ளூ ஸ்டார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நான் வானம் கலை திருவிழாவை இயக்குனர் பா. ரஞ்சித் நடத்தி இருந்தார். இதில் இவர் பேசிய விஷயங்கள் எல்லாம் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டிருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் பயோபிக் படத்தை எடுக்க இருக்கும் தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை தான் ரஞ்சித் இயக்க இருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கும் பயோபிக்:
அவர் வேற யாருமில்லை, பல்வங்கர் பலூ. பலூவின் வாழ்க்கையை மையமாக வைத்து ராமச்சந்திர குஹா ‘A Corner Of A Foreign Field' என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை தழுவி தான் படம் எடுக்க இருக்கிறார் ரஞ்சித். இது தொடர்பாக பா.ரஞ்சித்துக்குமே அழைப்பு வந்து இருக்கிறது. இதை சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பா. ரஞ்சித் கூறியிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.