கமலின் தக் லைஃப் படத்தை மண்ணை கவ்வ வைத்ததா படைத் தலைவன் - முதல் வசூல் எவ்வளவு தெரியுமா?

By subhashini · 14/6/2025

படைத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டனாக இருப்பவர் விஜயகாந்த். இவரின் மறைவு யாராலும் ஏற்க முடியவில்லை. இவருக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். அதில் இளையவரான சண்முக பாண்டியன் தன் தந்தையின் வழியை பின்பற்றி சினிமாவில் உள்ளார். இவர் விஜயகாந்த் உடன் சேர்ந்து நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ படத்தில் நடித்திருந்தார்.

இதனை அடுத்து சண்முக பாண்டியன் மதுர வீரன் என்ற படத்தில் நடித்து இருந்தார். சிறிய இடைவெளிக்கு பின் தற்போது சண்முகபாண்டியன் அவர்கள் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் அன்பு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக யாமினி சந்தர் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜெகநாதன் பரமசிவன் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசைஞானி இசை அமைத்திருக்கிறார்.

படைத்தலைவன் படம்:

இவர்களுடன் இந்த படத்தில் கஸ்தூரிராஜா, முனிஸ்காந்த், கருடன் ராம், அருள் தாஸ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சண்முக பாண்டியன் சிறப்பாக நடித்து இருக்கிறார். இந்த படத்திற்கு கூடுதல் பலமே கேப்டன் விஜயகாந்தை ஏஐ மூலம் கொண்டு வந்திருக்கிறார்கள். இதனாலே அவருடைய ரசிகர்கள் படையெடுத்து தியேட்டருக்கு சென்றிருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் படைத்தலைவன் படத்தினுடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வாரம் எந்த ஒரு பெரிய படங்களும் ரிலீஸ் ஆகாததால் இந்த படத்திற்கு 500 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கதை நன்றாக இருந்தாலும் அதை கையாண்ட விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கோட்டை விட்டார். மேலும், முதல் நாளிலேயே இந்த படம் 50 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் வசூல்:

புதுமுக நடிகராக இருந்தும் இவ்வளவு வசூல் செய்திருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதோடு கடந்த வாரம் கமலஹாசனின் தக் லைப் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் நேற்று மட்டுமே 60 லட்சம் தான் வசூல் செய்தது. தக் லைப் போன்ற பெரிய பட்ஜெட் படத்திற்கு நிகராக படைத்தலைவன் போன்ற சின்ன பட்ஜெட் படம் வசூல் செய்தது பலரையம் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இனி வரும் நாட்களிலும் படைத்தலைவன் படம் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் கதை:

படத்தில் ஹீரோ சண்முக பாண்டியன், காட்டில் வாழும் யானையை பயிற்றுவிப்பவராக இருக்கிறார். அவருடைய யானையினுடைய பெயர் மானியன். அவர் தன்னுடைய மானியனை குழந்தை போல பராமரித்து வருகிறார். அவருக்கு யானை தான் நண்பன், குடும்பம், வாழ்க்கை என எல்லாமே நினைத்து வாழ்கிறார்.
ஒரு நாள் சில தங்க திருடர்கள், கடத்தல்காரர்கள் மானியனை காட்டிலிருந்து கடத்தி சென்று போகிறார்கள்.
இதை அறிந்த சண்முக பாண்டியன் அதிர்ச்சியாகிறார்.

பின் எப்படியாவது மானியத்தை காப்பாற்ற வேண்டும் என்று போராடுகிறார். ஒன்றுமே தெரியாமல் இந்த பயணத்தை சண்முக பாண்டியன் தொடங்குகிறார். அதில் விலங்குகள், வஞ்சகர்கள், பிரச்சனைகள் என தொடர்ந்து பல சிக்கல்களில் சண்முக பாண்டியன் சிக்கி கஷ்டப்படுகிறார். இருந்தாலுமே அவர் உறுதியுடன் போராடுகிறார். இதற்கிடையில் ஒரு காட்சியில் விஜயகாந்த்தும் அவருக்கு உதவி செய்கிறார். இறுதியில் தன்னுடைய மானியத்தை சண்முக பாண்டியன் எப்படி கண்டுபிடிக்கிறார்? எதற்காக மானியத்தை கடத்தி சென்றார்கள்? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full