விஜய் டிவி இப்படி செய்வாங்கன்னு நினைக்கல, என்னை ஏமாத்திட்டாங்க - சர்ச்சை பேச்சால் மன்னிப்பு கேட்ட படவா கோபி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் ‘நீயா நானா’ ஒன்று. நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் ‘நீயா நானா’. இந்த நிகழ்ச்சி என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இப்படி கடந்த 24 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் தெருநாய்கள் நகரத்தில் வசிக்க கூடாது, தெருநாய்களுக்கும் நகரத்தில் வசிக்க உரிமை இருக்கிறது என்று இரு தரப்பில் விவாதம் நடைபெற்றது. அதாவது, கடந்த சில வாரங்களாகவே தெரு நாய் பிரச்சனை தான் விவாதமாக போய்க்கொண்டிருக்கிறது. பிரபலங்கள் சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த டாபிக் சர்ச்சையாகி இருப்பதால் நீயா நானா நிகழ்ச்சியிலும் இதை வைத்து விவாதம் செய்து இருக்கிறார்கள்.
நீயா நானா நிகழ்ச்சி:
ஒருபுறம் விலங்குகள் நல ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழு தெரு நாய்கள் மனிதர்களுக்கு எந்த தீங்கும் இழைப்பதில்லை, அன்பானவை, கருணை கொலை செய்யக்கூடாது என்று வாதிடுகிறார்கள். இன்னொரு பக்கம் தெரு நாய்களால் கடிபட்டு பாதிக்கப்பட்ட மக்கள் உணர்வு பூர்வமாக தங்களுடைய கவலைகளை எடுத்து வைக்கிறார்கள். இருதரப்பிலுமே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக படவா கோபி கலந்து கொண்டிருந்தார். இவர் நாய்களுக்கு ஆதரவாக தான் பேசி இருந்தார். ஆனால், இவர் பேசிய சில விஷயங்கள் தெருநாய்களால் பாதிக்கப்பட்ட மக்களுடைய உணர்வுகளை புண்படுத்துவது போல இருந்தது என்று சோசியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டது.
படவா கோபி சர்ச்சை:
படவா கோபிக்கு எதிராக பலரும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்றை படவா கோபி வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நான் ரொம்ப பிசியாக என் வீட்டின் திருமண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் விஜய் டிவி தரப்பில் இருந்து எனக்கு போன் செய்து, இந்த மாதிரி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் நாய்களைப் பற்றியும், நாய்கள் மீது இருக்கும் அன்பை பற்றி மட்டும் பேசினால் போதும் என்று சொன்னார்கள். விவாதம் எல்லாம் செய்ய நான் வரவில்லை என்று சொன்னேன். இருந்தாலுமே விஜய் டிவி, நீங்கள் சிறப்பு விருந்தினர் உங்களுடைய கருத்துக்களை மட்டும் சொன்னால் போதும் என்றார்கள். அதனால் தான் நான் இந்த பிசியான நேரத்தில் கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
https://www.youtube.com/watch?v=_Wn0-bd3sEU
படவா கோபி வீடியோ:
விஜய் டிவி தரப்பில் இப்படி செய்வார்கள் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. அவர்கள் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் பேசிய பல விஷயங்களை கட் செய்து எடிட் பண்ணி வெளியிட்டு இருக்கிறார்கள். சமுதாயத்தில் மக்களும் வாழவேண்டும் நாய்களும் வாழ வேண்டும். அவர்கள் இருவரும் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்பது போல் தான் நான் பேசினேன். ஆனால், நான் மனிதர்கள் விட நாய்கள்தான் பெரிது என்பது போல காட்டி விட்டார்கள். இது வன்முறையை ஏற்படுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல பேர் நான் பேசியதை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
மன்னிப்பு கேட்க காரணம்:
அதேபோல் ஒன்பது மணிக்கு மேல மனிதர்கள் தெருவிற்குள் வரக்கூடாது என்று நான் கண்டிப்பாக சொல்லவில்லை. நான் பல விஷயத்தை பேசிருந்தேன். இதை யாரும் மக்கள் நம்ப வேண்டாம். நான் பேசியது நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களை வருத்தம் அடை செய்து இருந்தால் நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மக்கள் விஜய் டிவியில் முழுமையாக அந்த எபிசோடில் என்ன நடந்தது என்பதை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசியது கிடையாது. என்னுடைய கருத்துக்கள் அப்படி புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.