'படையப்பா' ரீ-ரிலீஸ் : தயாரிப்பாளர் தேனப்பனுக்கு நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த கிப்ட் - என்ன தெரியுமா?

By subhashini · 29/4/2026

சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகி திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர். ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து படத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆனது. இந்த படம் மிக பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

மேலும், கில்லி படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்ய கோலிவுட் வட்டாரத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகி அதிக அளவில் வசூல் செய்த ரஜினியின் படையப்பா படத்தை ரீ ரீலிஸ் செய்து இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘படையப்பா’. இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார்.

படையப்பா படம்:

ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

படையப்பா ரீ ரிலீஸ்:

அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் வசூலில் சாதனை படைத்தது. மேலும், இது ரஜினிகாந்துடைய 150வது படம். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருந்தது. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தினுடைய 75வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரஜினி கொடுத்த கிப்ட்:

இந்நிலையில் இந்த படம் ரீ ரீலிஸ் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கலியை நடிகர் ரஜினிகாந்த் அன்பாக கொடுத்திருக்கிறார். அதோடு இந்த படத்தை ரஜினி-தேனப்பன் சேர்ந்து தயாரித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full