விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் “பகல் நிலவு” சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. பின் 2019ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த தொடர் ஆண்டாள் அழகர் என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த தொடரை ரவிப்ரியன் என்பவர் இயக்கினார். மேலும், இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முகமது அசிம் நடித்து இருந்தார். நடிகை சிவானி இவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்காகவே இந்த சீரியலை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் இருக்கும்.

இவர்களுடன் இந்த சீரியலில் ஷாம், உதய் மகேஷ், ஷர்மிளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் முடிவடையும் போது பலரும் வருத்தப்பட்டார்கள் என்று சொல்லலாம். இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த முகமது அசிம் அவர்கள் சென்னையை சேர்ந்தவர். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். இவருக்கு நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, காமெடி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஜீ தமில் வி.ஜே.வாக தான் சின்ன திரை உலகில் அறிமுகமானார்.

Advertisement

அதற்கு பிறகு ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடரின் மூலம் நடிப்பு உலகிற்கு வந்தார். பின்னர் விஜய் டிவியில் தெய்வம் தந்த வீடு என்ற தொடரில் நடித்து இருந்தார். அதற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மிகப் பிரபலமான சீரியல் பிரியமானவள்.இந்த தொடரில் பிரபா என்ற கதாபாத்திரத்தில் முகமது அசிம் நடித்தார். இவர் முதன் முதலாக பெரிய அளவில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தது இந்த பிரபா கதாபாத்திரத்தில் மட்டும் தான். அதுமட்டும் இல்லாமல் இவரைப் பார்க்கும் போது பல பேர் இவரை பிரபா என்று தான் கூப்பிடுவார்கள். அந்த அளவிற்கு பிரபலமானர். இதனை தொடர்ந்து இவருக்கு விஜய் டிவியில் பகல் நிலவு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தவுடன் பிரியமானவள் தொடரில் இருந்து விலகினார்.

பின் பகல் நிலவு சீரியல் அர்ஜுன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று கூட சொல்லலாம். தற்போது வரை கூட இவருடைய கதாபாத்திரம் மக்கள் மனதில் பேசப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் கடைசியாக நடித்து இருந்தார். இதற்கு பிறகு இவருடைய சீரியல் குறித்து எந்த தகவலும் வரவில்லை. தற்போது இவர் முதன்முறையாக தன்னுடைய மகன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அஸீமிற்கு ஸோயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement