ரஜினியுடன் Selfie எடுக்க விரும்பும் பாகிஸ்தான் ரஜினி - வைரலாகும் அவரின் ரஜினி ஸ்டைல் வீடியோஸ்.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்பி எடுக்க விரும்பும் பாகிஸ்தான் ரசிகரின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ்,சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அவர்கள் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார்.
ஜெயிலர் படம்;
இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள். மேலும், இந்த படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
https://twitter.com/mehreenzahra/status/1587713385818472448
ரஜினி நடிக்கும் படங்கள்:
இதனை அடுத்து ரஜினிகாந்த் அவர்கள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் அதர்வா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனை அடுத்து தலைவர் 170, தலைவர் 171 போன்ற படங்களில் ரஜினி நடிக்க இருக்கிறார். அதை எல்லாம் லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது. அதற்கான பூஜைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் தேதி தொடங்கும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
ரஜினியுடன் செல்பி எடுக்க விருப்பும் பாகிஸ்தான் ரசிகர்:
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்பி எடுக்க விரும்பும் பாகிஸ்தான் ரசிகரின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ரஜினிகாந்துக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவருடைய ஸ்டைல், நடைக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் ரஜினியின் தீவிர ரசிகர். அவர் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அரசு ஊழியரான ரெஹ்மத் கெஸ்கோரி ஆவார்.
https://www.youtube.com/watch?v=LNSBAY2Y5y4
வைரலாகும் வீடியோ:
இவர் ரஜினிகாந்துடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டிருக்கிறார். இவருக்கும், ரஜினிகாந்துக்குமே சில ஒற்றுமை இருக்கிறது. இவருடைய நடை, உடல் மொழி, சிகை அலங்காரம், துப்பாக்கியை கையாளும் விதம் என எல்லாமே ரஜினி மாதிரியே செய்கிறார். இவர் எப்படியாவது சூப்பர் ஸ்டாரை சந்தித்து அவருடன் போட்டோ எடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய ஒரே லட்சியம் என்று வீடியோவில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.