கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மாலை  ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாத இயக்கத்தினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.  வெடிகுண்டு நிரப்பிய காரை ரானுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதித் தாக்குதல் நடத்தினர். இதில் 40கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவத்தை அடுத்து பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்துவருகின்றனர்.

Advertisement

மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு இழப்புத் தொகையும் அரசு அறிவித்துள்ளது. அதே போல பல்வேறு பிரபலங்களும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நிதி யுதவியை அறிவித்துள்ளனர். நடிகர் ரோபோ ஷங்கர் தாக்குதகில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர் குடும்பங்களுக்கும் தலா 1 லட்சம் நிதியுதவி அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகர் சித்தார்த், தீவிரவாத தாக்குதல் நடத்திய கண்டித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், பாகிஸ்தானை முடக்குவது ஏன் அவ்வளவு கடினமா? அவர்கள் நம்பகரமற்ற அண்டை நாடு, அவர்களுக்கும் நமக்கும் உள்ள வர்த்தகத்தை முடக்குங்கள் மற்ற நாடுகளையும் முடக்க செய்யுங்கள். நமது ராணுவ ஹீரோக்களை காப்பற்றுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement

இந்த பதிவை கண்ட பாகிஸ்தான் குடிமகன் ஒருவர், மிக மோசமாக விமர்சித்திருந்தார். அதற்கு சித்தார்த் செருப்படி பதிலை கொடுத்தார். சித்தார்த்தின் இந்த பதிலுக்கு நடிகர் சந்தனு முதல் பலரும் ஆதரவு தெரிவித்து தங்களது பங்கிற்கு அந்த பாகிஸ்தான் குடிமகனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement
Advertisement