விஜய் சாரை எதிரியாக தான் பார்த்தேன், காரணம் - 'திருப்பாச்சி' பட நடிகர் பான் ப்ராக் ரவி பகிர்ந்து விஷயம்
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் விஜயின் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தான் திருப்பாச்சி. பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியாகி இருந்தது. அண்ணன் தங்கை சென்டிமென்ட், ஆக்சன் என்று பல என்டர்டைன்மெண்ட் உடன் இந்த படம் வெளியாகியிருந்தது.
இந்த படம் விஜயின் திரைப்பயணத்திற்கு ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் பான்பிராக் பராக் ரவி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஆர்யன் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கித் தந்திருந்தது. இந்நிலையில் இது படம் தொடர்பாக ஆர்யன் அளித்த பேட்டியில்,
திருப்பாச்சி படம் வெளிவந்து 20 வருடம் ஆகிவிட்டது. இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய கதை. இதற்கு காரணம் நான் அதற்கு முன்னாடி ஸ்ரீகாந்த் உடைய போஸ் படத்தில் தீவிரவாதியாக நடித்திருந்தேன்.
திருப்பாச்சி படம்:
அந்த படத்தில் என்னோட ஒரு வட இந்திய நடிகர் நடித்திருந்தார். தினமும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் போது எல்லோருக்கும் நான் விஷ் பண்ணுவேன். ஆனால், அந்த வட இந்திய நடிகர் வந்ததுமே செட்டில் இருக்கிற அத்தனை பேருடைய கவனமும் அவரும் மீது தான் இருக்கும். ஏன் என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. ஒருமுறை டம்மியாக ரெடி பண்ணி வைத்திருந்த கன்னிவெடி வெடித்துவிட்டது. எல்லோருமே அவரை தான் முதலில் போய் கவனித்தார்கள். யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை.
நடிகர் ஆர்யன் பேட்டி:
அது எனக்கு ரொம்பவே வருத்தத்தை கொடுத்தது. நாமும் ஒரு பெரிய படத்தில் முக்கியமான கதையில் நடிக்கணும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் திருப்பாச்சி படத்தில் நடிக்கும் வாய்ப்பு தெரிந்தது. நான் வாய்ப்பு கேட்டு போனேன். என்னை பார்த்ததுமே இயக்குனர் ஓகே சொன்னார். ஆனால், பைட் சீனில் என்னால் நடிக்க வருமா? என்று யோசித்தார். அதற்குப் பின் டெஸ்ட் சூட் வைத்துப் பார்த்தார். வாய்ப்பு கிடைக்கணும் என்று நானும் வெறிகொண்டு நடித்தேன். அது அவர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது.
https://www.youtube.com/shorts/EUEOiEghryc
வாய்ப்பு பற்றி சொன்னது:
திருப்பாச்சி படம் பார்த்து மக்கள் மத்தியில் எனக்கு கிடைத்த வரவேற்பு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது. தியேட்டர் விசிட் போகும் போது என்னை பார்த்ததுமே ஒரு விதமான அதிர்ச்சியுடன் சிலர், பான் பராக் ரவி கத்தினார்கள். அதெல்லாம் மறக்க முடியாத தருணங்கள். படப்பிடிப்பு தளத்தில் நான் பெருசாக விஜய் சாரிடம் பேச மாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்கு உண்மையாக இருக்கணும் என்று அப்போ அவரை எதிரியாக நினைத்துக் கொண்டு இருந்தேன். அவர் எப்போதும் அமைதியாக தான் இருப்பார்.
விஜய் பற்றி சொன்னது:
சில காட்சிகளில் நான் இப்படி செய்கிறேன் என்று மட்டும் தான் சொல்லுவார். அதோடு பேரரசு சாருக்கு இந்த கதாபாத்திரத்திற்கு சில ரெக்கமண்டேஷன் எல்லாம் வந்திருந்தது. படத்தில் நான் கமிட் ஆனதுக்கு பிறகும் உதவி இயக்குநர்கள் எனக்கு போன் பண்ணி பெங்களூரில் இருந்து ஒரு ஆர்டிஸ்ட் வந்திருக்கிறார். அவரை இந்த கேரக்டரில் நடிக்க வைக்க போறோம் என்றெல்லாம் சொன்னார்கள். எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது. ஆனால், இந்த விஷயத்தை எல்லாம் தாண்டி நான் பான்பிராக் ரவி கேரக்டர் எனக்கு வந்தது. அதை சரியாக பண்ணிக் கொடுக்கணும் என்ற பொறுப்பும் இருந்தது. இந்த கதாபாத்திரத்தை வைத்துதான் என்னை அடையாளப்படுத்துகிறார்கள் என்று நெகிழ்ச்சியில் பேசி இருக்கிறார்.