'சுயமரியாதையை இழந்து தான் வாழ்கிறோம்' சசிகுமாரிடம் கண்ணீர் விட்டு புலம்பிய ஊராட்சி மன்ற தலைவர்கள்

By subhashini · 25/9/2024

நந்தன் படம் தொடர்பாக இயக்குனர் சரவணன் போட்டு இருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சசிகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுப்பிரமணியபுரம்’ படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

முதல் படத்திலிலேயே இவர் இயக்குனராகவும் நடிகராகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளிவந்த ‘ஈசன்’ என்ற படத்தை எடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு இவர் நடிகராக மட்டும் தான் நடித்து வருந்தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சசி குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘நந்தன்’.

நந்தன் படம்:

இந்தப் படத்தை இரா. சரவணன் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘உடன்பிறப்பு’ என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் , நந்தன் படத்தில் சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை ரா என்டர்டைன்மென்ட் தயாரித்து இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் குறித்த தகவல்:

படத்தில் பட்டியல் இன மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் போது என்னவெல்லாம் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இயக்குனர்
கொடுத்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து சீமான், சிவகார்த்திகேயன் உட்பட பல பிரபலங்கள் பாராட்டிருந்தார்கள். இந்த நிலையில் பல ஊர்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களாக இருக்கும் பட்டியலின மக்களுக்கு இந்த படத்தினுடைய சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இயக்குனர் போட்ட வீடியோ:

பின் இது தொடர்பான வீடியோவை இயக்குனர் சரவணன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில், நந்தன் படம் பார்த்து முடித்துவிட்டு பஞ்சாயத்து தலைவர்கள் எல்லோருமே சசிகுமார் மற்றும் இயக்குனர் சரவணனிடம் கண்ணீர் விட்டு தங்களுக்கு நடந்த சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அதோடு தங்களுக்கு நடந்ததை பற்றி விரிவாக பேட்டியும் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் எல்ராம் பட்டு கிராம ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக வித்யா என்பவர் இருக்கிறார்.

பேட்டியில் சொல்லப்பட்டது:

இவர் பேட்டியில், எனக்கு சுயமரியாதை என்பதை கொடுக்கப்பட்டதில்லை. அதை இழந்து விட்டு தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார். இவரை அடுத்து இன்னொருவர், நந்தன் படத்தில் காட்டியது போல ஜட்டியோடு என்னை ஓட விட்டு அடித்தார்கள். அந்த வலி எனக்கு தெரியும் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர்கள் பேசி இருக்கும் வீடியோ தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full