இந்த வயதில் லிப் லாக் முத்தம் - இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகையின் புகைப்படம்.

By Rajkumar · 15/11/2020

சின்னத்திரை நடிகை கிருத்திகா, இவர் 2005 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான "மெட்டி ஒலி " என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் "கேளடி கண்மணி" , "வம்சம்" , "செல்லமே" போன்ற பல சின்னத்திரை தொடர்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார்.சின்னத்திரை சீரியல்களை தவிர்த்து இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "மானாட மயிலாட" என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

பார்ப்பதற்கு நல்ல உயரத்துடன், திடகாத்திரமாக இருப்பதால் இவருக்கு பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரமாகவே அமைகிறது. மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த "சின்னத்தம்பி" என்ற சீரியலில் நடித்து இருக்கிறார் . அந்த தொடரிலும் வில்லலியாக நடித்து அசத்தி வந்த இவர் சில வருடங்களுக்கு முன்னர் அருண் சாய் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். எடையில் கொஞ்சம் சீரியலில் பிரேக் எடுத்துக்கொண்ட இவர் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருந்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சின்னத்தம்பி சீரியலில் நடித்த பவானி ரெட்டியுடன் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் ஒரு புகைப்படத்தில் பவானி ரெட்டிக்கு லிப் லாக் கொடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். என்ன விஷயம் என்று பார்த்தால் சமீபத்தில் தான் பவானி ரெட்டிக்கு பிறந்தநாளாம், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தான் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் கிருத்திகா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full