தங்கமயில் செய்த வேலையை புட்டு புட்டு வைத்த சரவணன் , கோபத்தில் பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 12/10/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், அக்கவுண்டில் 10000 இல்லை என்று சொல்ல, செந்தில்-சித்தப்பு இருவரும் பயந்தார்கள். ஆனால், பாண்டியன், கதிர் மீது சந்தேகப்பட்டு திட்டினார். உடனே ராஜி கோபப்பட்டு, கதிருக்காக சப்போர்ட் செய்ய, பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். பின் கதிர், செந்தில், சித்தப்பா மூவருமே பாண்டியன் அக்கவுண்டில் எடுத்த பணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சரவணன், உண்மை தெரிந்து வருத்தப்பட்டு அப்பாவிடம் மன்னிப்பு கேட்க போனார். ஆனால், கதிர் வேணாம் என்று தடுத்து விட்டார்.

மறுநாள் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு தங்கமயில்-சரவணன் உடன் சித்தப்பு-கதிர் போனார்கள். தங்கமயில் ரொம்பவே பதட்டத்திலும், பயத்திலுமே இருந்தார். நல்லபடியாக சரவணன்- தங்கமயில் கல்யாணம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு பிறகு தான் தங்கமயில் பெருமூச்சு விட்டார். இந்த வாரம் அக்கவுண்டில் பணம் இல்லாததை பற்றி விசாரிக்க பாண்டியன் வங்கிக்கு போக, எல்லா உண்மைகளும் தெரிந்து விடுகிறது. பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், கதிரை அறைந்து விட்டார். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாக, பணத்தை எடுத்தது கதிர் தான் என்று பாண்டியன் சொன்னதை யாரும் நம்பவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

கடைசியில் உண்மையை கதிர் ஒத்துக் கொண்ட பிறகு ராஜுயால் எதுவுமே பேச முடியவில்லை. பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அவ்வளவுதான் என்று பாண்டியன் கண்டமேனிக்கு கத்துகிறார். உடனே சரவணன், உண்மையை சொல்லப் பார்க்க, செந்தில்- சித்தப்பா இருவரும் அவரை தடுத்து அமைதியாக்கி விட்டார்கள். நேற்று எபிசோடில், உண்மையை சொல்லவிடாமல் கதிர்-செந்தில் இருவருமே சரவணனை சமாதானம் செய்தார்கள். இருந்தாலுமே, சரவணன் குற்ற உணர்ச்சியில் வருத்தப்பட்டார்.

நேற்று எபிசோட்:

பின் எல்லோருமே எப்படியாவது பணத்தை ரெடி பண்ண புலம்பிக் கொண்டும், அதற்கான வேலையும் மும்முறமாக செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், கதிரை திட்டிக் கொண்டிருந்தார். இதனால் சரவணனுக்கு கோபம் வந்து, உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் வந்தது. நம்ம ஹோட்டலில் தங்க முடியாமல் இருந்தபோது கதிர் தான் அந்த பணத்தை அனுப்பினான். அவனுக்காக எதுவும் செலவு செய்யவில்லை என்று சொல்ல, தங்கமயில் அமைதியாகி இந்த உண்மையை வீட்டில் சொல்ல வேண்டாம்.

சீரியல் ட்ராக்:

எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கோமதி வழக்கம் போல் ராஜியால் தான் இந்த நிலைமை என்று திட்ட, கோபத்தில் ராஜி பேச மாமியார்-மருமகள் இடையே சண்டை நடந்தது. மறுநாள் காலையில் எல்லோருமே வீட்டில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறது? என்று பயத்திலேயே இருந்தார்கள். ராஜி தன்னுடைய நகையை கழட்டி கதிரிடம் கொடுத்து பணத்தை ரெடி பண்ண சொல்ல, வாங்க மறுத்து விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், பணம் எங்கே? இல்லை என்றால் வீட்டை விட்டு வெளியே போ என்று சொல்கிறார்.

இன்றைய எபிசோட்:

கதிர், ரெடி பண்ண முடியவில்லை என்று அமைதியாக நிற்கிறார். இதனால் கோபப்பட்ட பாண்டியன், கதிரின் கையை பிடித்து வெளியே தள்ள பார்க்கிறார். அப்போது சரவணன் தடுத்து நிறுத்தி, அவன் எனக்காக தான் பணம் கொடுத்தான். ரூமின் வாடகை 5000 இல்லை 26,000. தங்கமயில் தவறாக போட்டு விட்டாள் என்று நடந்த உண்மையை சொல்ல பாண்டியன் பயங்கரமாக கோபப்படுகிறார். பின் தங்கமலை திட்டி அறிவுரை சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். கடைசியில் கோமதி, யார் என்ன பிரச்சனை? என்றாலும் என் மகன் தான் காரணமா? அவரவர்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்ளுங்கள் என்று பயங்கரமாக திட்டுகிறார். சோகத்தில் தங்கமயில் உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full