பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை நிரோஷாவை கையில் தூக்கி செல்லும் நடிகர் - என்ன ஆச்சு ? வைரலாகும் வீடியோ

By subhashini · 17/10/2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை நிரோஷா குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’. இந்த தொடர் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. அப்பாவாக ஸ்டாலினும், அவருக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வெங்கட், ஆகாஷ் நடிக்கிறார்கள்.

சமீபத்தில்தான் வசந்த் இந்த தொடரில் இருந்து விலக, அவருக்கு பதில் வெங்கட் இணைந்துள்ளார். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து இருப்பதால் பெருமிதமாக நினைக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள் எதிர்பாராத விதமாக காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் பாண்டியன் ரொம்பவே மனமுடைந்து போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின்பு மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைக்கிறார். தற்போது சீரியல் பணத்தை எடுத்தது கதிர் தான் என்ற உண்மை பாண்டியனுக்கு தெரிய வந்து அவரை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப பார்க்கிறார். அப்போது சரவணன் நடந்த உண்மையை சொல்ல, தங்கமயில் மீது எல்லோருமே கோபப்படுகிறார்கள். தங்கமயிலை பயங்கரமாக பாண்டியன் திட்டுகிறார்.
தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தங்கமயில் வேதனையில் இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

சரவணன் அவருடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார். இனி அடுத்து என்ன நடக்கும்? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் பாசமுள்ள அம்மாவாகவும், நல்ல மாமியார் ஆகவும் கோமதி கதாபாத்திரத்தில் நிரேஷா நடித்து கொண்டு இருக்கிறார். இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை நிரோஷா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

View this post on Instagram

A post shared by Nirosha Ratha (@nirosha_radha)

நிரோஷா பதிவு:

அதாவது, நடிகை நிரோஷாவை சீரியலில் அவருக்கு மகனாக நடிக்கும் விஜே கதிர்வேல் கையில் தூக்கிக்கொண்டு வந்து நாற்காலியில் உட்கார வைத்திருக்கிறார். இந்த வீடியோவை தான் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து, வாழ்க்கை எவ்வளவு தூரம் சென்றாலும் ஒரு மகன் எப்போதும் தன் தாயின் அன்பை இதயத்தில் சுமந்து கொண்டிருப்பான் என்று உணர்வுபூர்வமாக பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து பலரும், என்ன ஆச்சு? உடம்பு ஏதாவது பிரச்சனையா? நன்றாக இருக்கிறீர்களா? என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

நிரோஷா குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நிரோஷா. இவர் எம்.ஆர். ராதா அவர்களின் மகளாவார். இவருடன் பிறந்தவர்கள் அனைவருமே தமிழ் மகளாவார். உலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் தான். மேலும், நிரோஷா அவர்கள் அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருக்கிறார். தற்போது சீரியல், சினிமா என்று பிசியாக இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full