குமாரை பொளந்து கட்டும் கதிர், அரசி சொன்ன உண்மையால் உறைந்த மொத்த குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, என்னிடம் இருக்கும் நகையை வைத்து லோன் அப்ளை பண்ணலாம் என்றார். அதற்கு கதிர், இந்த நகையை உங்கள் வீட்டில் கொடுத்துவிடு. நான் லோன் பிரச்சனையை பார்த்து கொள்கிறேன் என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, பாண்டியனிடம் பேச போனார். ஆனால், பாண்டியன் கொஞ்சம் கூட முகம் கொடுத்து பேசாமல் மீனாவை திட்டினார். இதையெல்லாம் கேட்டு கோபப்பட்ட செந்தில், நீங்கள் கொடுத்த டார்ச்சலால் தான் நான் இந்த வேலைக்கு போனேன். எனக்காக இந்த வீட்டில் பணம் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அதோடு அப்பா கொடுத்த 10 லட்சம் பணத்தை தான் நான் மீனா அப்பாவிடம் கொடுத்தேன்.
வீட்டில் இந்த உண்மையை மீனாவே செல்வதாக இருந்தார். அதற்குள் பணம் தேவை என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன். மீனா தான் லோன் போட்டு கொடுத்தார். நீங்கள் அவளையே அவமரியாதையாக பேசுகிறீர்கள் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபத்தில் கோமதி, சொந்த வீட்டிலேயே திருடுவியா என்ற செந்திலை அடித்தார். இதெல்லாம் கேட்ட பாண்டியன், நான் ஒரு அப்பனாக எல்லாம் செய்கிறேன் என்று சொன்னவுடன் செந்தில், நீங்கள் நல்ல அப்பாவே கிடையாது என்று சொன்னார். அதைக் கேட்டு பாண்டியன் அதிர்ச்சி ஆனார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
செந்தில், அரசி கல்யாண வரை நீங்கள் செய்தது எல்லாமே தவறுதான். நீங்கள் என்னைக்குமே எங்களுக்கு நல்ல அப்பாவாக இருந்ததில்லை. உங்களுடைய விருப்பம் தான் நடக்கணும் என்று நினைக்கிறீர்கள் என தன் மனதில் இருந்த ஆதங்கம் மொத்தத்தையும் கொட்டி விட்டார். இதனால் மனமுடைந்த பாண்டியன் எதுவுமே பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார். கோமதி கோபத்தில் செந்திலையும் வீட்டில் உள்ள எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். தங்கமயில், சரவணன் எல்லோருமே சமாதானம் செய்தும் கோமதி கேட்கவில்லை. மீனா, கோமதியை சமாதானம் செய்யப் பார்த்தார்.
கடந்த வாரம் :
அப்போது கோபத்தில் கோமதி, மீனாவை திட்டி கீழே தள்ளி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு பாண்டியன் சரக்கு அடித்து விட்டு வந்தார். போதையில் நிலை தெரியாமல் பாண்டியன் தடுமாறி நடந்தார். பின் பாண்டியன் வீட்டில் எல்லோரையும் நிற்க சொல்லி தன் சின்ன வயதில் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி கலங்கி இருந்தார். இதையெல்லாம் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே அழுதார்கள். செந்திலும் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்க போனார். உடனே கதிர், தடுத்து நிறுத்தி விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமார் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக பழகிருப்பதை கதிர், மீனா, அரசியின் அக்கா மூவருமே பார்த்து விடுகிறார்கள். இதனால் கோபப்பட்ட கதிர் வீட்டிற்கு வந்த குமாரிடம் சண்டை வாங்கினார். குமார் தெனாவட்டாக பதில் சொல்கிறார். இதனால் குமார், கதிரிடையே சண்டை அதிகமாகிறது. இதனால் இரு வீட்டில் உள்ள இரு வீட்டில் உள்ள எல்லோருமே வந்துவிடுகிறார்கள். அப்போது குமார், நான் யார் கூட வேண்டுமானாலும் சுத்துவேன். அதைக் கேட்க நீங்கள் யார்? என்று சொல்கிறார். இதனால் கோபப்பட்டு கதிர் மீண்டும் குமாரை அடிக்க, தன் மகன் செய்தது தவறு என்று கூட பார்க்காமல் சக்திவேல் பாண்டியனையும் பாண்டியன் குடும்பத்தையும் தான் தவறாக பேசுகிறார். பின் கதிர் கல் எடுத்து குமாரும் மீது போடப் போகிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே அரசி தடுத்து நிறுத்தி அவனுக்காக நீங்கள் ஏன் ஜெயிலுக்கு போகணும். அவன் யாரோ என்று சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகிறது. அதற்கு பின் அரசி, எனக்கும் அவனுக்கும் கல்யாணமே ஆகவில்லை. தன்னுடைய குடும்பத்தை அசிங்கப்படுத்த இவன் கல்யாணத்துக்கு முன்னால் எனக்கு கடத்தி சென்று விட்டான். இவனால் என்னுடைய குடும்பம் அசிங்கப்படக்கூடாது என்று தான் நான் என்னுடைய கழுத்தில் தாலி கட்டிக் கொண்டேன். மற்றபடி எனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆகவில்லை என்று சொல்வதைக் கேட்டு ரெண்டு குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது. உடனே அப்பத்தா, அரசியை வீட்டிற்குள் அழைத்து சென்று விடுகிறார். என்ன சொல்வதென்று புரியாமல் பாண்டியன் குடும்பம் அப்படியே வெளியில் நிற்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.