திருமணத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த அரசி, மீனா எடுக்கப் போகும் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் அரசி இடம் ராஜியின் அம்மா, மாரி, அப்பத்தா மூவருமே திருமணத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் கேட்டார்கள். ஆனால், அரசி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். குமாரை பார்த்து எல்லோருமே, எதற்காக இப்படி செய்தாய்? உன்னால் இரண்டு குடும்பமும் வேதனையில் இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அரசி, அவர்தான் வீட்டில் சம்மதம் சொல்வது போல் நடித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று இன்னும் குமார் மீது வீண்பழியை போட்டுக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் மன வேதனையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார்.
அதைப் பார்த்து கோமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாமியை கண்ட மேணிக்கு திட்டி இருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலைகுலைந்து இருந்தார்கள். இன்னொரு பக்கம் சுகன்யா, அரசியை குமாரின் அறைக்கு கொண்டு அழைத்துப் போனார். அப்போது குமார், நான் உன்னை திருமணமே செய்யவில்லை. எதற்காக இப்படி பொய் சொன்னாய்? உன்னையும் உன்னுடைய குடும்பத்தையும் அசிங்கப்படுத்த தான் நான் நினைத்தேன். ஆனால், நீ எனக்கு மேல ஒரு திட்டம் போடுகிறாயா? உண்மையை சொல் என்று மிரட்டினார். ஆனால், அரசி அதை கண்டு கொள்ளாமல் தூங்கப் போனார். குமார் கோபமாக அரசி கையை பிடிக்க, குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து அரசி, உண்மையை நீ போய் எல்லோரிடமும் சொல் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் கோமதி, அரசி செய்த துரோகத்தை நினைத்து ரொம்பவே புலம்பி கொண்டு இருந்தார். பாண்டியனால் வீட்டில் யாரிடம் பேச முடியவில்லை. பின் அவர் கடைக்கு கிளம்பும்போது வீட்டில் உள்ள எல்லோருமே வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால், பாண்டியன் யார் பேச்சையும் கேட்கவில்லை, கடைக்கு கிளம்பி விட்டார். பாண்டியன் வீடு இழவு வீடாகவே இருக்கிறது. ஒவ்வொருவருமே எதையோ பறிகொடுத்தது போல தவித்துக் கொண்டிருந்தார்கள். பழனியை அழைத்து மீனா பேசினார். அப்போது மீனா, எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அரசியை எப்படியாவது மாரியம்மன் கோவிலுக்கு கூட்டிட்டு வாருங்கள்.
நேற்று எபிசோட்:
அவளிடம் உண்மையை கேட்க வேண்டும் என்று சொன்னார். பழனி, அதெல்லாம் எதற்கு மீனா. அவள் துரோகி என்றெல்லாம் அரசியை திட்டி இருந்தார். மீனா, நீங்கள் கண்டிப்பாக அரசியை அழைத்து வாருங்கள் என்று சொன்னார். பழனியும் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் குமார் அரசி, தன்னை மிரட்டியதை நினைத்து பார்த்து கொண்டிருந்தார். பின் அரசி வைத்திருந்த கத்தியை கையில் குமார் வைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அரசி வெளியே வந்தார். குமார் அந்த கத்தியை காண்பித்து அரசியிடம் பேசி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமார், என்னெல்லாம் சொல்லி என்னை மிரட்டினாய். நீ எப்படி அனுபவிக்கப் போகிறாய் பார்? என்று சொல்லி மீண்டும் அரசியை மிரட்டி அடிக்க போகிறார். அந்த இடத்தில் இருந்து அரசி விலகி விட்டதால் சுவர்மிது பட்டு குமார் கையில் அடிபடுகிறது. உடனே வலி தாங்க முடியாமல் குமார் கத்துகிறார். அப்பத்தாவும், குமாரின் அம்மாவும் அங்கே வந்து விடுகிறார்கள். என்ன ஆனது? என்று கேட்க அரசி ஏதோ சொல்லி சமாளித்து விடுகிறார். அதற்கு பின் வந்த பழனி, அரசியை சந்தித்து கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார். கோவிலில் மீனா-ராஜி இருவருமே காத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கு வந்த அரசி, கண்கலங்கி அழுகிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது மீனா, என்ன நடந்தது? எதற்காக நீ திருமணம் செய்து கொண்டாய் என்று கேட்கிறார். வழக்கம்போல அரசி பொய் சொல்கிறார். உடனே ராஜி, நீ சொல்வதெல்லாம் பொய் என்று எங்களுக்கு தெரியும். உண்மையிலேயே என்ன நடந்தது? அவன் உன்னை மிரட்டினானா? என்று கேட்கிறார்கள். அரசி, குமார் என்னை மோசமான போட்டோவை காண்பித்து மிரட்டியது உண்மை தான். அவனிடம் மன்னிப்பு கேட்க தான் போனேன். ஆனால், அவன் என்னை வைத்து கடத்தி வைத்து என்னையும் குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன் என்று சொன்னேன். அதனால் தான் வேறு வழி இல்லாமல் நானே தாலி கட்டிக் கொண்டேன். இதற்கெல்லாம் காரணம், சுகன்யா அத்தை தான். அவர் சொல்லி தான் நான் குமரை பார்க்க போனேன் என்று சொன்னவுடன் மீனா- ராஜி இருவருமே ஷாக் ஆகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.