திருமணம் பற்றிய ரகசியத்தை உடைத்த அரசி, அதிர்ச்சியில் மொத்த குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 13/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், எந்த நம்பிக்கையில் நீ அவனை காதலித்தாய் என்றெல்லாம் கேட்க, ராஜி ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். அதற்குப் பின் கதிர்- ராஜி இருவருமே லோன் விஷயமாக பேங்கிற்கு சென்று இருந்தார்கள். அப்போது பேங்கில் இருந்தவர், லோன் வாங்குவது பற்றி எல்லாம் விசாரித்தார்கள். அதோடு நம்பிக்கையானவர் உங்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்றார். இதனால் ராஜிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

ராஜி, என்னிடம் இருக்கும் நகையை வைத்து லோன் அப்ளை பண்ணலாம் என்றார். அதற்கு கதிர், இந்த நகையை உங்கள் வீட்டில் கொடுத்துவிடு. நான் லோன் பிரச்சனையை பார்த்து கொள்கிறேன் என்றார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, பாண்டியனிடம் பேச போனார். ஆனால், பாண்டியன் கொஞ்சம் கூட முகம் கொடுத்து பேசாமல் மீனாவை திட்டினார். இதையெல்லாம் கேட்டு கோபப்பட்ட செந்தில், நீங்கள் கொடுத்த டார்ச்சலால் தான் நான் இந்த வேலைக்கு போனேன். எனக்காக இந்த வீட்டில் பணம் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அதோடு அப்பா கொடுத்த 10 லட்சம் பணத்தை தான் நான் மீனா அப்பாவிடம் கொடுத்தேன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

வீட்டில் இந்த உண்மையை மீனாவே செல்வதாக இருந்தார். அதற்குள் பணம் தேவை என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தேன். மீனா தான் லோன் போட்டு கொடுத்தார். நீங்கள் அவளையே அவமரியாதையாக பேசுகிறீர்கள் என்று சொன்னார். இதைக் கேட்டவுடன் கோபத்தில் கோமதி, சொந்த வீட்டிலேயே திருடுவியா என்ற செந்திலை அடித்தார். இதெல்லாம் கேட்ட பாண்டியன், நான் ஒரு அப்பனாக எல்லாம் செய்கிறேன் என்று சொன்னவுடன் செந்தில், நீங்கள் நல்ல அப்பாவே கிடையாது என்று சொன்னார். அதைக் கேட்டு பாண்டியன் அதிர்ச்சி ஆனார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் செந்தில், அரசி கல்யாண வரை நீங்கள் செய்தது எல்லாமே தவறுதான். நீங்கள் என்னைக்குமே எங்களுக்கு நல்ல அப்பாவாக இருந்ததில்லை. உங்களுடைய விருப்பம் தான் நடக்கணும் என்று நினைக்கிறீர்கள் என தன் மனதில் இருந்த ஆதங்கம் மொத்தத்தையும் கொட்டி விட்டார். இதனால் மனமுடைந்த பாண்டியன் எதுவுமே பேசாமல் அங்கிருந்து சென்று விட்டார். கோமதி கோபத்தில் செந்திலையும் வீட்டில் உள்ள எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்தார். தங்கமயில், சரவணன் எல்லோருமே சமாதானம் செய்தும் கோமதி கேட்கவில்லை. மீனா, கோமதியை சமாதானம் செய்யப் பார்த்தார்.

சீரியல் ட்ராக்:

அப்போது கோபத்தில் கோமதி, மீனாவை திட்டி கீழே தள்ளி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு பாண்டியன் சரக்கு அடித்து விட்டு வந்தார். போதையில் நிலை தெரியாமல் பாண்டியன் தடுமாறி நடந்தார். பின் பாண்டியன் வீட்டில் எல்லோரையும் நிற்க சொல்லி தன் சின்ன வயதில் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொல்லி கலங்கி இருந்தார். இதையெல்லாம் கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே அழுதார்கள். செந்திலும் தன்னுடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்க போனார். உடனே கதிர், தடுத்து நிறுத்தி விட்டார்.

https://www.youtube.com/watch?v=SIXmpDz-o5w

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குமார், வேறொரு பெண்ணுடன் பைக்கில் செல்வதை பார்த்த கதிர் அவரிடம் சண்டை போடுகிறார். இருவருக்கும் இடையே பெரிய கலவரமே நடக்கிறது. அப்போது இரண்டு வீட்டிலும் தடுக்கிறார்கள். அரசி, என் அண்ணன் மீது கையை வைத்தால் அவ்வளவு தான் என்று திட்டுகிறார். அதற்கு குமார், நான் என்ன வேண்டுமெனாலும் செய்வேன் என்று சொல்கிறார். கடைசியில் வேறு வழி இல்லாமல் அரசி, குமார் ஒன்னும் என் கணவன் கிடையாது. குமாரை பழி வாங்குவதற்காக எனக்கு நானே கட்டிய தாலி என்று சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த பேருமே ஷாக் ஆகிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full