அரசிக்காக அவர் அண்ணன்கள் செய்த வேலை, கொந்தளித்த பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 24/7/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் கதிர், செந்தில், மீனா, ராஜி நான்கு பேருமே குமார் செய்த வேலையை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த சமயம் வந்த குமார் வேணும் என்று கதிர்,செந்திலை வம்பு இழுத்தார். இதனால் ஆத்திரம் தாங்காமல் கதிர்,செந்தில் இருவருமே கதிரை அடிக்கப் போனார்கள். உடனே மீனா, ராஜி அவர்களை தடுத்து நிறுத்தி விட்டார்கள். அதற்கு பின் பாண்டியன், குமார் செய்த வேலைக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். பெண் பிள்ளை பெற்றவர்கள் எல்லோருக்குமே இது பாடமாக இருக்கும் என்று சொல்லி அரசியை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார்.

போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியன், தன் மகளை கடத்தி வைத்து குமார் செய்த வேலையை பற்றி எல்லாம் சொன்னார். பின் அரசியுமே நடந்த உண்மை எல்லாம் சொன்னார். அதனால் போலீஸ், குமார் மீது கம்ப்ளைன்ட் எடுத்துக் கொண்டார்கள். பின் போலீஸ், குமாரின் வீட்டிற்கு சென்று பாண்டியன் குடும்பத்தார் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை சொன்னார்கள். இதனால் குமாரின் அம்மா, அப்பா, பெரியப்பா எல்லாருமே தடுத்தார்கள். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. பின் குமார் தப்பித்து ஓடும்போது போலீஸ் பிடித்து விட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் குமார் வீட்டில் எல்லோருமே எவ்வளவோ கெஞ்சி கதறினார்கள். ஆனால், போலீஸ் கேட்கவே இல்லை. குமாரை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தார்கள். இதை பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வேடிக்கை பார்த்தார்கள். அப்போது குமாரின் அப்பா சக்திவேல், என் மகனை இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியே எடுத்து விடுவேன். அதற்குப் பிறகு உங்களை எல்லாம் கவனித்து கொள்கிறேன் என்று மிரட்டி விட்டு சென்றார். அதற்குப்பின் ராஜி, குமார் கைதானதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க, அவருக்கு கதிர் ஆறுதல் சொன்னார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், ரொம்ப அன்பாக சரவணன், பழனி இடம் பேசினார். அதோடு அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதையும் கேட்டார். அப்போது சரவணன், கதிர் ட்ராவல்ஸ் தொடங்க லோன் வாங்கும் விஷயம் பற்றி சொன்னார். இன்னொரு பக்கம் குமாரை வெளியில் எடுக்க முடியவில்லை என்று முத்துவேல்- சக்திவேல் இருவருமே வீட்டில் சொன்னார்கள். இதனால் வீட்டில் உள்ள பெண்கள் ரொம்பவே கதறி அழுதார்கள். அப்போது சக்திவேல், எல்லாத்துக்கும் காரணம் அந்த பாண்டியன் குடும்பம் தான். அவர்களை பழிவாங்வேன். அவர்களை சும்மா விடமாட்டேன். அழித்தே தீருவேன் என்றெல்லாம் சபதம் போட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சரவணன், அரசியை அழைத்துக் கொண்டு மளிகை கடைக்கு போகிறார். அங்கு அரசியை உட்கார வைத்து கொஞ்சம் கலகலப்பாக பேசுகிறார். அதற்குப்பின் சரவணன், அரசி இருவரும் செந்தில் வேலை செய்யும் இடத்திற்கு போகிறார்கள். அங்கு செந்தில் வேலை செய்வதை பார்த்து அரசி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். அதற்குப்பின்அந்த இடத்திற்க்கு கதிர் வருகிறார். உடனே நான்கு பேருமே சேர்ந்து வெளியே ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். பின் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அரசி மனமும் கொஞ்சம் மாறுகிறது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், கோமதி இடம் கதிர் புதிதாக பிசினஸ் செய்வதை பற்றி பேசுகிறார். அதற்கு ராஜி, டிராவல்ஸ் தொடங்கப் போகிறார். பணத்திற்காக லோன் போட்டு இருக்கிறோம். ஆனால், அவர்கள் கேரண்டி கேட்கிறார்கள் என்று நடந்ததை எல்லாவற்றையும் சொல்கிறார். உடனே கதிர், எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன். யாரும் எதுவும் செய்ய வேண்டாம் என்று திமிராகப் பேசுகிறார். பாண்டியன், கதிரை திட்டிவிட்டு நாளைக்கு பேங்குக்கு நான் வருகிறேன் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full