அரசியை வீட்டிற்கு அழைத்து வந்த குமார், அவமானத்தில் பாண்டியன் குடும்பம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சுகன்யா, அரசியை குமார் பார்க்க வேண்டும் என்று சொன்னான். நான் தான் அழைத்துக் கொண்டு போனேன். ஆனால், அவன் போனை எடுக்கவில்லை. அரசிக்கு என்னானது என்று தெரியவில்லை என்று சக்திவேலிடம் சொல்லி புலம்பி இருந்தார். சக்திவேலும், தன் மகன் செய்த வேலையை நினைத்து சந்தோஷப்பட்டார். ஆனால், சுகன்யா என்ன நடக்குமோ என்று பயத்தில் இருந்தார். இன்னொரு பக்கம் பாண்டியன் வீடு சோகத்தில் மூழ்கி கிடந்தது. குமார் தான் அரசியை கடத்திக் கொண்டு சென்றிருப்பார் என்று வீட்டில் உள்ள எல்லோருமே பயந்தார்கள்.
இன்னொரு பக்கம் அரசியை குமார் கட்டி போட்டு வைத்திருந்தார். அரசி, என்னை எதற்காக கடத்திட்டு வந்தாய். உன்னை நம்பியது தப்பா? ஏன் இப்படி என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று ரொம்ப எமோஷலாக பேசி அழுதார். உடனே குமார், நான் உன்னை காதலிப்பது போல் நம்பி ஏமாத்தினேன். உன்னை நான் கல்யாணம் செய்து கொள்ள போவதில்லை. என்னுடைய சுண்டு விரல் கூட உன் மீது படாது. ஆனால், நாளை கல்யாணம் நடக்கும் போது நீ என்னுடன் தான் இருந்தாய் என்று சொல்லி கொண்டு போய் விடுவேன். நீயும் உன்னுடைய குடும்பமும் அசிங்கப்படணும் என்று ரொம்ப மோசமான வில்லனாக பேசி இருந்தார். இதைக் கேட்டு அரசி கதறினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் அரசிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வீட்டில் எல்லோருமே பதறிக் கொண்டிருந்தார்கள். அதற்கு பதில் செந்தில், கதிர், சரவணன் மூவருமே குமாரின் வீட்டிற்கு சென்று அவருடைய அப்பா,பெரிய அப்பாவிடம் சண்டை போட்டார்கள். அவர்களுமே, குமார் இங்கு இல்லை எங்களுக்கு எந்த விஷயம் தெரியாது என்றார்கள். ஆனால், சக்திவேல் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.
அதற்குப்பின் முத்துவேல், சக்திவேல் இடம் குமார் எங்கே? என்று கேட்க, அவர் திருச்சி சென்றிருக்கிறான் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
அவரும் அதை நம்பி விட்டார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டிலிருந்து எல்லோரும் பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். என்ன சொல்வது என்று புரியாமல் பாண்டியன் கதி கலங்கி நின்றார். பின் மாப்பிளை வீட்டார், அரசி எங்கே? நேரம் ஆகிறது என்று கேட்டார்கள். உடனே அங்கிருந்து உறவினர், அரசி, குமாருடன் ஓடிவிட்டாள் என்று சொன்னவுடன் மாப்பிள்ளையும் அவர் அம்மாவும் ஷாக் ஆனார்கள். பாண்டியன் குடும்பத்திற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி வீட்டில் இல்லை என்பதை தெரிந்தவுடன் மாப்பிள்ளை வீட்டில் ஷாக் ஆகிறார்கள். மாப்பிள்ளை அம்மா பயங்கரமாக கோவப்பட்டு கோமதியையும் பாண்டியனையும் பேசுகிறார். வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு எடுத்துச் சொல்லிப் பார்க்கிறார்கள். ஆனால், மாப்பிள்ளை அம்மா கேட்கவில்லை. அரசி, குமாருடன் ஓடி சென்ற விஷயத்தைப் பற்றி வெளியே எல்லோருமே கேவலமாக பேசுகிறார்கள். அவமானத்தில் பாண்டியன் கூனிக்குருங்கி போயிருக்கிறார். அந்த சமயம் பார்த்து குமார் வருகிறார். குமாரை பார்த்தவுடன் பாண்டியன் மகன்கள் அவரை அடிக்கப் போகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
உடனே குமார், நான் இல்லாமல் வாழ முடியாது என்று அவள் தான் ஓடி வந்துவிட்டாள். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இரவு முழுவதும் என்னுடன் தான் அவள் இருந்தாள் என்று பொய் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் பாண்டியன் குடும்பமும், மாப்பிள்ளை வீட்டாருமே அதிர்ச்சியானார்கள். அதற்குப்பின் காரில் இருந்து இறங்கி அரசி வருகிறார். என்ன நடந்தது? என்று அரசி இடம் கேட்கிறார்கள். ஆனால், அரசி அமைதியாக இருக்கிறார். அதற்கு பின் தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டுகிறார். அதை பார்த்தவுடன் குமார் ஆடிப் போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.