அவசர அவசரமாக நிச்சயதார்த்த ஏற்பாடு செய்த பாண்டியன், அரசி முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 8/4/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சக்தி, குமார் இருவருமே சாப்பிட வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் தங்கமயில் ஒளிந்து கொண்டார். இதையெல்லாம் கவனித்த ஓனர், தங்கமயில் இடம் விசாரித்தார். அதற்கு தங்கமயில், ஏதேதோ காரணங்களை சொல்லி அழுதார். இன்னொரு பக்கம் பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்தார். அப்போது போன் செய்த சுகன்யா, வீட்டுக்கு வாருங்கள் என்று கூப்பிட, பழனி முடியாது என்று போனை வைத்து விட்டார். அந்த சமயம் பார்த்து பஸ் ஸ்டாண்டுக்கு தங்கமயில் வந்தவுடன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.

மேலும், இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த சுகன்யாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப் பின்பு சென்ற பழனியிடம் சண்டை வாங்கி இருந்தார். பழனியும் பேசாமல் கோபத்தில் அமைதியாக இருந்தார். உடனே சுகன்யா, நான் கூப்பிடும் போது வரவில்லை. தங்கமயில் உடன் ஊர் சுற்றுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா? என்று மோசமாக இருவரையும் சேர்த்து வைத்து பேசி இருந்தார். இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் பழனி, சுகன்யாவை திட்டி விட்டார். பழனி வெளியே வர, சுகன்யா தடுத்து நிறுத்தி இருந்தார். கோபத்தில் பழனி, சுகன்யாவை தள்ளிவிட்டு வெளியே வந்து விட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

நேற்று எபிசோட்டில் அரசிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால் வீட்டில் எல்லோருமே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது மீனா, உனக்கு மாப்பிள்ளை பிடித்திருந்தால் மட்டும் ஓகே சொல்லு. தேவையில்லாததை பற்றி யோசிக்காதே. நாங்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்கிறோம் என்று ஆதரவாக இருந்தார். மறுநாள் காலையில் மாப்பிள்ளை வீட்டில் வருகிறார்கள் என்று எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அரசியை மூன்று மருமகள்களுமே ரெடி செய்தார்கள். அப்போது வந்த சுகன்யா, உங்களுக்கு வேலை இருந்தால் போய் பாருங்கள். நான் அரசியை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:

உடனே மீனா, நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு வேலையை செய்யுங்கள் என்று அரசியிடம் சுகன்யாவை நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டார். இதனால் சுகன்யாவிற்கு மீனா மீது பயங்கர கோபம் வந்தது. அதற்குப்பின் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து விட்டார்கள். மாப்பிள்ளைக்கு பாண்டியன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்தார்கள். அதற்குப்பின் மாப்பிள்ளை பற்றி அரசியின் அண்ணன்மார்கள் விசாரித்தார்கள். இன்னொரு பக்கம் அரசி இடம் கோமதி, தயவுசெய்து எந்த பிரச்சினையும் செய்யாதே. இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல் என்று ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு பின் அரசியை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் அரசியை பார்த்தவுடன் மாப்பிள்ளைக்கு பிடித்து விடுகிறது. அவர் அரசியிடம் பேசுகிறார். ஆனால், அரசி எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் தனியாக அழைத்து சென்று பேச சொல்கிறார்கள். பின் அரசியை மீனா அனுப்பி வைக்கிறார். மாப்பிள்ளை எவ்வளவு பேசியுமே வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவே நிற்கிறார் அரசி. பின் எங்களுக்கு இந்த கல்யாணத்திற்கு சம்மதம் என்று மாப்பிள்ளை வீட்டில் சொல்கிறார்கள். உடனே மாப்பிள்ளை அம்மா, நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என்று சொன்னவுடன் பாண்டியனின் மொத்த குடும்பமும் ஷாக் ஆகிறது.

சீரியல் ட்ராக்:

உடனே மாப்பிளை அம்மா, உங்களுக்கு நிச்சயதார்த்தம் தெரியாதா? என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன், எல்லாம் சொல்லிவிட்டோம். எங்களுக்கும் சம்மதம் என்கிறார். அதற்குப்பின் ரெண்டே மாதத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நிச்சயதார்த்த ஓலையை படிக்கிறார்கள். எதுவும் சொல்லாமல் திருமணத்திற்கு அரசி சம்மதிக்கிறார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அரசியும் மூன்று அண்ணிமார்களும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, கல்யாணம் முக்கியம்தான். ஆனால், உனக்கு படிப்பு முக்கியம். எப்படியாவது மாப்பிள்ளை இடம் நாங்கள் பேசி உன்னுடைய படிப்பிற்கு ஏற்பாடு செய்கிறோம். நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே. நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full