பரபரப்பாக திருமண ஏற்பாடு செய்யும் பாண்டியன், அரசி முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் சுகன்யா, பயங்கரமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். பாண்டியன் குடும்பம் எல்லோருமே கதவை தட்டி இருந்தார்கள். பின் கதவை திறந்த பழனி, ஒன்னும் இல்லை. சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்றார். உடனே சுகன்யா, ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்வது என்று சொல்லக்கூடாதா? நான் அவர் பொண்டாட்டி தான். இருந்தாலும் என் இடம் தவறாக நடந்து கொள்வதா? என்று மோசமான பழியை பழனி மீது போட்டார். இதைக் கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் பாண்டியன், பழனியை திட்டிவிட்டு சென்றார். பழனிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அந்த இடத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்.
பின் சரவணன், பழனிக்கு ஆறுதல் சொன்னார். ஆனால், பழனியால் எதுவுமே பேச முடியவில்லை. வழக்கம் போல சுகன்யா எல்லோரிடமும் நடித்து நாடகம் போட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு இன்னும் சந்தேகம் தான் அதிகமாகின்றது. பின் ராஜியிடம் இதைப் பற்றி பேசி இருந்தார். அப்போது மீனா, அரசி விஷயத்திலும் தேவையில்லாமல் பிரச்சனை செய்தது சுகன்யா தான். இப்போது சித்தப்பா விஷயத்திலும் வீண்பழி போடுகிறார் என்றார். பின் வீட்டிற்கு வந்த பழனியிடம் கோமதி அறிவுரை சொன்னார். ஆனால், அவர் வேதனையில் அமைதியாக நின்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சக்தி, குமார் இருவருமே சாப்பிட வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் தங்கமயில் ஒளிந்து கொண்டார். இதையெல்லாம் கவனித்த ஓனர், தங்கமயில் இடம் விசாரித்தார். அதற்கு தங்கமயில், ஏதேதோ காரணங்களை சொல்லி அழுதார். இன்னொரு பக்கம் பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்தார். அப்போது போன் செய்த சுகன்யா, வீட்டுக்கு வாருங்கள் என்று கூப்பிட, பழனி முடியாது என்று போனை வைத்து விட்டார். அந்த சமயம் பார்த்து பஸ் ஸ்டாண்டுக்கு தங்கமயில் வந்தவுடன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
கடந்த வாரம் எபிசோட்:
மேலும், இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த சுகன்யாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப் பின்பு சென்ற பழனியிடம் சண்டை வாங்கி இருந்தார். பழனியும் பேசாமல் கோபத்தில் அமைதியாக இருந்தார். உடனே சுகன்யா, நான் கூப்பிடும் போது வரவில்லை. தங்கமயில் உடன் ஊர் சுற்றுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா? என்று மோசமாக இருவரையும் சேர்த்து வைத்து பேசி இருந்தார். இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் பழனி, சுகன்யாவை திட்டி விட்டார். பழனி வெளியே வர, சுகன்யா தடுத்து நிறுத்தி இருந்தார். கோபத்தில் பழனி, சுகன்யாவை தள்ளிவிட்டு வெளியே வந்து விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசிக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதால் வீட்டில் எல்லோருமே வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா, உனக்கு மாப்பிள்ளை பிடித்திருந்தால் மட்டும் ஓகே சொல்லு. தேவையில்லாததை பற்றி யோசிக்காதே. நாங்கள் உங்களுக்கு சப்போர்ட் செய்கிறோம் என்று ஆதரவாக இருக்கிறார். மறுநாள் காலையில் மாப்பிள்ளை வீட்டில் வருகிறார்கள் என்று எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியை மூன்று மருமகள்களுமே ரெடி செய்கிறார்கள். அப்போது வந்த சுகன்யா, உங்களுக்கு வேலை இருந்தால் போய் பாருங்கள். நான் அரசியை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
உடனே மீனா, நாங்களே பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு வேலையை செய்யுங்கள் என்று அரசியிடம் சுகன்யாவை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்கிறார். இதனால் சுகன்யாவிற்கு மீனா மீது பயங்கர கோபம் வருகிறது. அதற்குப்பின் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து விடுகிறார்கள். மாப்பிள்ளைக்கு பாண்டியன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்கிறார்கள். அதற்குப்பின் மாப்பிள்ளை பற்றி அரசியின் அண்ணன்மார்கள் விசாரிக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசி இடம் கோமதி, தயவுசெய்து எந்த பிரச்சினையும் செய்யாதே. இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல் என்று ரொம்ப எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் அரசியை அழைத்துக் கொண்டு வருகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.