குமாருக்கு பயத்தை காட்டும் அரசி, வேதனையில் பாண்டியன் செய்தது - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இதைக் கேட்டவுடன் பாண்டியன் உடைந்து போய்விட்டார். சக்திவேல் உள்ளுக்குள் சந்தோசப்பட்டார். குமாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகவே நின்றார். ஆனால், உண்மையில் அந்த தாலியை குமார் கட்டவில்லை. குமாரை பழிவாங்கத்தான் அரசி அந்த தாலியை தனக்கு தானே கட்டிக் கொண்டார். பின் அரசி, தன்னுடைய தந்தையிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனால், அவர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். கோவத்தில் மீனா, குமாரையும் அவருடைய குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார்.
அரசி, பாண்டியனின் காலில் விழுந்து கதறி அழுதார். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார். பின் பாண்டியன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருமே அரசியையும் குமாரின் குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, ரெண்டு பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதில் என்ன பிரச்சனை? அவர்களை வாழவிடுங்கள் என்று அரசியின் கையைப் பிடித்து இழுத்தார். அரசி, குமார் கையைப் பிடித்தார். இதை பார்த்து பாண்டியன்- கோமதி இருவருமே நொறுங்கி விட்டார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் அப்பத்தா, குமார்- அரசி இருவரையும் தங்களுடைய வீட்டிற்கு அழைத்து சொன்னார்கள்.
வீட்டுக்குள் சென்றவுடன் முத்துவேல், குமார் திருமணம் செய்து கொண்டதை பற்றி விசாரிக்க, சக்திவேல் தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னார். குமார் உண்மையை சொல்ல வந்தார். ஆனால், குமாரை பேசவிடாமல் முத்துவேல் தடுத்தார். உடனே அரசி, தாலி கட்டும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் பயப்படுகிறீர்கள் என்று இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோவை அரசி காண்பித்தார். இதை பார்த்துடன் மொத்த குடும்பமே ஷாக் ஆனது. குமாருக்கு என்ன சொல்வதென்றே புரியாமல் அதிர்ச்சியில் இருந்தார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ரொம்ப வேதனையில் இருந்தார்கள். பாண்டியனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார். கோமதி கோபப்பட்டு தன்னுடைய பிள்ளைகள் அனைவரையும் திட்டிக் கொண்டிருந்தார். பாண்டியன் மளிகை சென்று அரசி சொன்னதைப் பற்றி எல்லாம் நினைத்து கொண்டு இருந்தார்கள். கடைக்கு வந்தவர்கள் எல்லோருமே அரசி திருமணத்தைப் பற்றி விசாரித்தார்கள். அவரால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் முத்துவேல், அரசியை திருமணம் செய்து வந்ததை பற்றி சந்தோஷமாக குமாரை பாராட்டி பேசி இருந்தார். குமார் உள்ளுக்குள், நான் திருமணம் செய்யவில்லையே என்று புலம்பி கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி இடம் ராஜியின் அம்மா, மாரி, அப்பத்தா மூவருமே திருமணத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் குமாரி காதல் செய்து பற்றியும் கேட்கிறார்கள். ஆனால், அரசி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். குமாரை பார்த்து எல்லோருமே, எதற்காக இப்படி செய்தாய்? உன்னால் இரண்டு குடும்பமும் வேதனையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். உடனே அரசி, அவர்தான் வீட்டில் சம்மதம் சொல்வது போல் நடித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று இன்னும் குமார் மீது வீண்பழியை போட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் பாண்டியன் மன வேதனையில் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
சீரியல் ட்ராக்:
அதைப் பார்த்து கோமதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாமியை கண்ட மேணிக்கு திட்டுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே நிலைகுலைந்து இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சுகன்யா, அரசியை குமாரின் அறைக்கு கொண்டு அழைத்துப் போகிறார். அப்போது குமார், நான் உன்னை திருமணமே செய்யவில்லை. எதற்காக இப்படி பொய் சொன்னாய்? உன்னையும் உன்னுடைய குடும்பத்தையும் அசிங்கப்படுத்த தான் நான் நினைத்தேன். ஆனால், நீ எனக்கு மேல ஒரு திட்டம் போடுகிறாயா? உண்மையை சொல் என்று மிரட்டுகிறார். ஆனால், அரசி அதை கண்டு கொள்ளாமல் தூங்கப் போகிறார். குமார் கோபமாக அரசி கையை பிடிக்க, குமாரின் கழுத்தில் கத்தியை வைத்து அரசி,என்னை தொட நினைத்தால் கூட உன்னை சாவடித்து கொன்று விடுவேன். உண்மையை நீ போய் எல்லோரிடமும் சொல் என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.