பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க குமார் செய்த வேலை, அரசி செய்த அட்ராசிட்டி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 19/6/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார் செய்ததை பார்த்து கதிருக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே அரசி ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் குமார், பாண்டியன் முன் அரசியை அசிங்கப்படுத்த நினைத்தார். அங்கேயும் அரசி சமாளித்து விட்டார். பின் மீண்டும் பாண்டியனிடம் வம்பிழுக்க குமார் போனார். உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்தவுடன் அரசி, குமார் என்னை அடித்துக் கொடுமை படுத்துவதாக புகார் கொடுத்தார். இதனால் குமாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, அமைதியாக இருந்தார்.

செந்தில் செய்த வேலையால் மீனா கோபமாக இருந்தார். அதனால் செந்தில் இடம் சரியாக மீனா பேசுவதில்லை. மீனா தன்னுடைய தந்தைக்கு போன் செய்து பணம் என்ன செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், பணத்தை வேலை வாங்கி தருபவரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். இதனால் தன்னுடன் வேலை செய்பவரிடம் மீனா, 10 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி தர முடியுமா? என்று கேட்க கேட்டார். அதற்கு அவருமே என்னால் முடிந்தவரை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம் தங்கமயில், பிரக்னன்சி கிட் வாங்கி செக் செய்து பார்த்தார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து தங்கமயில் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமே சொன்னார். பின் தங்கமயில் இந்த சந்தோஷமான விஷயத்தை சரவணன் இடம் சொல்ல போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் தங்கமயில் மெசஜ் போட்டார். அதை பார்த்த சரவணன், இது புது ட்ராமாவா? ஒருவன் எத்தனை முறை ஏமாறுவது? என்று சொல்வதால் தங்கமயில் வருத்தப்பட்டார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் சரவணன் சொன்னதை நினைத்து தங்கமயில் ரொம்பவே கஷ்டப்பட்டார். உடனே தங்கமயில், நீ கிளம்பு நாம் எதுவாக இருந்தாலும் சம்மந்தியிடம் பேசிக் கொள்ளலாம் என்று பாண்டியன் வீட்டிற்கு சென்றார்கள். அப்போது தங்கமயில் அம்மா, இந்த வீட்டிற்கு வாரிசு வரப்போகிறது. தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னார். இதை கேட்டவுடன் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். பின் சரவணனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைத்தார்கள். ஆனால், சரவணன் அதை எதையுமே நம்பவில்லை.

சீரியல் ட்ராக்:

பின் தனியாக ரூமிற்கு சென்று தங்கமயில் இடம் சரவணன், இதுவும் டிராமாவா? என் குடும்பத்தையே பொய் சொல்லி ஏமாற்றுகிறாயா? என்று சொன்னார். உடனே தங்கமயில், டெஸ்ட் பண்ண கிட்டை காண்பித்தார். அதை சரவணன், ஏதாவது ஸ்கெட்ச் வச்சு கோடு போட்டாரா என்று அலைத்துப் பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து தங்கமயிலுக்கு ரொம்பவே கஷ்டமானது. பின் சரவணன், உண்மையாலுமே தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து அவரை சமாதானம் செய்தார். இருவருமே அப்பா- அம்மா ஆன சந்தோஷத்தில் இருந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்வீட் எடுத்து கொண்டாடினார்கள்.

https://www.youtube.com/watch?v=w5oKSESiviM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் போமோவில் அரசி, என்னிடம் துணியே இல்லை. எனக்கு ஷாப்பிங் போகணும் என்று சொல்கிறார். இதனால் குமாரும் அரசியை அழைத்துக் கொண்டு போகிறார். அப்போது குமார், உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள் என்று அரசியை கடையிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார். பின் தன்னுடைய அப்பாவிடம் குமார், அரசிடம் பணமே இல்லை. வசமாக மாட்டிக் கொண்டாள். அவஸ்தைப்படுத்தும் என்று சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் அரசி, துணி எல்லாம் எடுத்து முடித்துவிட்டு குமார் உடைய கார்டை வைத்து மொத்த பணத்தையும் கட்டி விடுகிறார். கார்டில் இருந்து பணம் எடுத்ததற்கான மெசேஜை பார்த்தவுடன் குமார் பதறி அடித்துக் கொண்டு துணி கடைக்கு போகிறார்.

behindtalkies AMP · Quick view
View full