கராத்தே ஸ்டைலில் குமாருக்கு பதிலடி கொடுத்த அரசி, மீனா அப்பா சொன்ன வார்த்தை-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, வீட்டில் அப்பா, அம்மா கேள்வி கேட்க தான் செய்வார்கள். எதற்காக அவரிடம் நீ எதிர்த்து பேசுகிறாய்? உன்னுடைய வாழ்க்கையில் நீ என்னதான் செய்ய முடிவு எடுத்திருக்கிறாய். நான் போலீசாக வேண்டும் என்று ஒரு லட்சியத்துடன் இருக்கிறேன். நீ கடைசிவரை கார் ஓட்ட போகிறாயா? என்று கேட்டார். அதற்கு கதிர், நான் கார் ஓட்டுவது உனக்கு பிரச்சனையா? நான் இப்படியே இருக்க மாட்டேன். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே என்று சொன்னார். இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், கடையில் செந்தில் சந்தோஷமாக இல்லை என்று சொன்னதை வைத்து பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார்.
இதனால் செந்தில் மனமடைந்து அங்கிருந்து வெளியே வந்து விட்டார். அதற்கு பின் கதிர்- செந்தில் இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள் . அப்போது செந்தில், நான் அப்பா பேசியதற்கு ஏதாவது பேசி இருக்கணும். கடையில் என்னை ரொம்ப மோசமாக திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் மீனா, தன்னுடைய அப்பாவை சந்தித்து செந்திலுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா? நம்பிக்கையானவர்களா? என்றெல்லாம் பயத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு அவருமே கண்டிப்பாக இன்னும் ரெண்டு நாட்களில் வேலை கிடைத்து விடும் என்று சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து குழந்தை விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது தங்கமயிலின் அம்மா, மாப்பிளை உன்னிடம் எப்படி நடந்து கொள்கிறார்? உன்னுடைய கைக்குள் வைக்க பாரு என்று தேவையில்லாததெல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஆனால், தங்கமயில் தன்னுடைய அம்மாவை திட்டி விட்டார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். செந்தில்-கதிர் மட்டும் வரவே இல்லை. இதனால் பாண்டியன், சாப்பிட கூட வர முடியாதா? என்று திட்டினார்.
நேற்று எபிசோட்:
அந்த சமயம் பார்த்து கதிர்- செந்தில் இருவருமே வந்து விட்டார்கள். அப்போது பாண்டியன், இனி லேட்டாக வந்தால் சோற்றில் கை வைக்கக்கூடாது. பட்டினியாக இருக்கட்டும் என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு செந்தில்- கதிர் இருவருமே திட்டு வாங்கன மானங்கெட்ட சோறு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று உள்ளே சென்று விட்டார்கள். பாண்டியன் சென்ற பிறகு கோமதி செந்தில்- கதிர் இருவரையும் அழைத்து சாப்பாடு போட்டார். அந்த சமயத்தில் மீண்டும் பாண்டியன் உள்ளே வருவதால் கோமதிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பாண்டியன் ஏதாவது சொல்லிவிடுவார் கோமதி அவரை அழைத்து சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் குமாரும் சக்தி வேலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது குமார், அரசியை சாப்பாட்டை பரிமாற சொல்கிறார். வேண்டுமென்றே குமார், அரசி சாப்பாடு போடும் போது தட்டை நகர்த்தி விடுகிறார். இதனால் கோபப்பட்டு குமார், அரசியை மோசமாக திட்டுகிறார். அதோடு அரசியும், பாண்டியன் குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் சக்திவேல் சந்தோஷப்படுகிறார். அப்போது வந்த அப்பத்தா, குமாரை திட்டுகிறார். பின் ரூமிற்கு வந்த குமார், அரசியிடம் மீண்டும் வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் கோபப்பட்ட அரசி, குமாரை அடித்து கீழே தள்ளி கழுத்தை கயிறு வைத்து நெருக்குகிறார்.
சீரியல் ட்ராக்:
மூச்சு விட முடியாமல் குமார் திணறுகிறார். அதற்குப்பின் அரசி, குமாரை மிரட்டி வெளியே போய் தூங்க சொல்கிறார். இன்னொரு பக்கம் செந்திலுக்கு போன் செய்த மீனாவின் அப்பா வீட்டிற்கு வர சொல்கிறார். செந்தில் ரொம்பவே பதறுகிறார். பின் மீனா- செந்தில் இருவருமே கிளம்பும்போது பாண்டியன், செந்திலுக்கு வேலை வைக்கிறார். உடனே மீனா ஏதோ காரணம் சொல்லி செந்திலை அழைத்து கொண்டு தன் அப்பா வீட்டிற்கு போகிறார்கள். அப்போது செந்தில், வேலை விஷயத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்கிறார் உடனே மீனாவின் அப்பா, பதற வேண்டாம். ஆர்டர் போட்டு இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்று சொல்கிறார்கள். இதை கேட்டவுடன் செந்தில் சந்தோஷப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.