உண்மையை போட்டு உடைத்த ராஜி,கோபத்தில் வெளுத்து வாங்கிய பாண்டியன்-பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 26/9/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் கதிர் சவாரி போனதால் கோமதி-ராஜி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் கதிர் -ராஜி இருவருக்கும் மத்தியில் சண்டை நடந்தது. ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாகி உண்மையை சொல்ல ராஜி போனார். ஆனால், அவரை தடுத்து ராஜி போட்ட கண்டிஷனுக்கு கதிர் ஒத்து கொண்டார். அதன் பின் வீட்டுக்கு வந்த ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி அதிர்ச்சி ஆகி மறுத்தார். உடனே ராஜி மிரட்டலுக்கு வேறு வழியில்லாமல் கோமதி ஒத்து கொண்டார்.

அந்த சமயம் பார்த்து தங்கமயில் உள்ளே வந்த உடனே எல்லோரும் பேச்சை நிறுத்த, அவர் முகமே வாடியது. இதனால் வேதனைப்பட்ட தங்கமயில், சரவணன் இடம் சொல்லி புலம்ப, அவர் கண்டுகொள்ளாமல் வேலைக்கு சென்று விட்டார். இந்த வாரம் சரவணன் தன்னுடைய மொத்த சம்பளத்தையும் அப்பாவிடம் கொடுத்தார். உடனே அவர், உன் செலவுக்கு எடுத்துக்கொள் என்று சொன்னதற்கு, வேணாம் என்று சரவணன் சொல்லி இருந்தார். இதையெல்லாம் பார்த்து தங்கமயில் புலம்பி தன்னுடைய அம்மா வீட்டிற்கு போனார். பின் தங்கமயில், சரவணன் செய்ததையும், மீனா-ராஜி- கோமதி செய்வதையும் சொல்லி தன் அம்மாவிடம் புலம்பி அழுதார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதையெல்லாம் கேட்டு கோபப்பட்ட தங்கமயில் அம்மா, பாண்டியன் வீட்டிற்கு சண்டைக்கு போக பார்த்தார். ஆனால், அவருடைய கணவர் தடுத்து விட்டார். பின் தங்கமயில் அம்மா, நீ எப்படியாவது மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வர பாரு. அந்த வீட்டினுடைய மொத்த கண்ட்ரோலையும் உன் கையில் எடு என்று வழக்கம் போல தன்னுடைய மகளுக்கு தேவையில்லாத அறிவுரை எல்லாம் சொல்லி அனுப்பி இருந்தார். அதன் பின் மீனா- ராஜி- தங்கமயில் மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்தநாளை பற்றி தங்களுடைய கணவன்மார்களிடமும் பேசி இருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில், ரூமில் சரவணன் பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அதை பார்த்து சந்தோஷப்பட்டு, இது தான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், எனக்கு கொஞ்சம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்க, நான் எப்படி கொடுக்க முடியும். நான் ஒரு ஐடியா சொல்கிறேன். நீ வேலைக்கு போ என்று சரவணன் சொல்ல, வருத்தப்பட்டு தங்கமயில் அமைதியாகி விட்டார். மறுநாள் ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தை தன் மாமனாரிடம் சொல்ல சொல்லி மாமியாரிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தவுடன் கோபத்தில் தன்னுடைய அப்பாவிடம் எல்லா உண்மையும் சொல்ல ராஜி வெளியே போனார்.

இன்றைய எபிசோட்:

இதனால் எல்லோருமே பயந்தார்கள். அப்போது ராஜியின் அண்ணனை பெண் பார்க்கும் வீட்டார் வந்தார்கள். அவர்கள் பாண்டியனுக்கு தெரிந்தவர்கள் என்பதால் பேசி கொண்டு இருந்தார்கள். இதை பார்த்த ராஜியின் அப்பா, சித்தப்பா எல்லாமே வெளியில் வந்து பாண்டியனை வம்பிழுத்து, அவனுடைய குடும்பத்தை ரொம்ப கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்றைய எபிசோடில், ஒரு கட்டத்தில் கதிர் கோபப்பட, பாண்டியன் தடுத்து நிறுத்தி நல்ல விஷயம் நடக்கும் இடத்தில் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று கிளம்ப பார்க்கிறார்.

சீரியல் ட்ராக்:

அப்போது ராஜி, நான் டியூஷன் எடுப்பது என்னுடைய விருப்பம். யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. உங்கள் மகன் ரொம்ப யோக்கியமா? சரவணன் மாமா கல்யாணத்திற்கு முன்பு எங்களை கடத்தி வைத்திருந்தான். இது யாருக்காவது தெரியுமா? என்று கேட்டவுடன் பாண்டியன் கோபப்பட்டு ராஜி அண்ணனை வெளுவெளு என்று வெளுத்தார். பின் வீட்டில் இதை ஏன் சொல்லவில்லை என்றதற்கு, சரவணன் மாமா கல்யாணம் நடக்க தான் மறைத்தோம் என்கிறார்கள். இனிமேல் எது நடந்தாலும் சொல்ல வேண்டும் என்று பாண்டியன் சொன்னவுடன் ராஜி - மீனா ஒத்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ராஜி அப்பா, தன் தம்பி மகன் செய்ததை தவறு என்று அடிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full